இந்தியத் தேர்தல் வரலாறு
August 21, 2016
ஆர்.முத்துக்குமார்
நேரு முதல் மோடி வரையிலான இந்திய அரசியலின் ஒவ்வொரு நகர்வையும் விவரிக்கும் வரலாற்று ஆவணம்.ஐனநாயகம் தழைக்கும் தேசம் இந்தியா என்றால் அதற்கு அடிநாதமாக இருப்பவை தேர்தல்கள்.இங்கே தேர்தல் என்பதை ஆட்சியாளர்களைத் தேடித்தரும் கருவியாகப் பார்க்கக்கூடாது.மாறாக,இந்தியாவின் அரசியலை,வளர்ச்சியை,எதிர்காலத்தைத் தீர்மானிக்கும வல்லமை பொருந்திய ஆயுதமாகப் பார்க்க வேண்டும்.சுதந்திர இந்தியா சந்தித்திருக்கும் அத்தனைப் பொதுத் தேர்தல்களையும் அதன் சமூக,அரசியல்,வரலாற்றுப் பின்னணியுடன் விவரித்துச் சொல்லும் இந்தப் புத்தகம்,இந்தியா என்ற ஜனநாயக தேசம் பரிணாம வளர்ச்சி பெற்ற விதத்தைத் துல்லியமான தரவுகளின் வழியாகப் புதிவுசெய்திருக்கிறது.மக்களவைத் தேர்தலோடு நிறுத்திவிடாமல்,நம்முடைய மனத்துக்கு நெருக்கமான தமிழகத் தேர்தல் வரலாற்றையும் சேர்த்தே விவரிக்கிறது தேர்தல் வரலாறு என்பதை கட்சி,ஆட்சி,ஓட்டு,கூட்டு,வளர்ச்சி,வீழ்ச்சி,வெற்றி,தோல்வி ஆகியவற்றோடு சுருக்கிவிடாமல்,தேர்தல் காலங்களில் விவாதிக்கப்பட்ட பிரச்னைகள்,வாக்குறுதிகள்,தேர்தலைத் தீர்மானித்த நிகழ்வுகள்,அரங்கேறிய திருப்புமுனைகள் என ஒவ்வொரு அம்சத்தையும் நுணுக்கமாக அணுகி,அவற்றின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.மொழிச்சிக்கல்,மதவாத அரசியல்,தீவிரவாதம்,வெளியுறவுக் கொள்கை,ஊழல் என இந்தியாவின் அரசயல் பாதையைத் தீர்மானித்த ஒவ்வொரு அம்சத்தையும் ஆழமாக விவரிக்கும் இந்தப் புத்தகத்தில்,காஷிமீர் பிரச்சனை,சீன உறவு,இடதுசாரிகளின் பங்களிப்பு,எமர்ஜென்ஸி,மண்டல் கமிஷன்,ஈழம்,புதிய பொருளாதாரக் கொள்கை,பாபர் மசூதி இடிப்பு,பாஜகவின் வளர்ச்சி,குஜராத் கலவரம்,ஸ்பெக்ட்ரம்,மோடியின் குஜராத்,ஊழலுக்கு எதிரான இயக்கங்கள் என இந்திய அரசியலோடு இரண்டறக் கலந்துவிட்ட நிகழ்வுகள் சிறப்புக் கவனம் பெறுகின்றன.தேர்தல்களின் வழியே தேசத்தின் அரசியல் வரலாற்றைப் பதிவுசெய்யும் முதல் தமிழ நூல்.
ரூ.650/-
No Comments