இந்தியா எதை நோக்கி?

August 8, 2016

ராமச்சந்திர குஹா/லீனாகீதா ரெகுநாத்/தினேஷ் நாராயணன் /வெங்கிடேஷ் இராமகிருஷ்ணன் 

தொகுப்பும் மொழியாக்கமும் :  செ.நடேசன்

சங்பரிவாரங்களின் சகிப்பின்மை   நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது .கருத்துரிமை, பேச்சுரிமை துப்பாக்கிமுனைகளில் கேள்விக் குறிகளாகின்றன, அக்லக் கூட்டுக்கொலை செய்யப்படுகிறார். இந்தியாவின் பிரதமர் மோடியோ தனது நீடித்த மௌனங்களால் இவற்றுக்கு ஆதரவான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறார். இவற்றைக் கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் தங்கள் விருதுகளைத் திருப்பியளிக்கும்போது ‘அரசியல் பின்னணி’ என ஏகடியம் செய்யப்படுகின்றனர். இந்த அநாகரிகர்களுக்கெதிராக, நமது நாட்டின் பன்முகத்தன்மையை, மதசார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புகளைப் பாதுகாக்க இவற்றில் நம்பிக்கைகொண்ட அனைவரும் களமிறங்கவேண்டிய தருணம் இது. அந்தப்போராளிகளின் களத்தில் இந்நூல்  ஒருகருவியாக பயன்படும் என்ற நம்பிக்கையில் தமிழில் இதனை வெளியிடுகிறோம்.

ரூ.150

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *