ஆ.மாதவன் ஐம்பதாண்டுகள் ஆங்காங்கே உதிரியாக ஆ.மாதவன் எழுதிய சிந்தனைத் தெறிப்புகளின் செறிவான தொகுதி இது.ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாக இவற்றை ஒருசேரக் காண்கையில் அடையாளப் படுவது இந்த நூலின் சிறப்பு.தமிழ் இலக்கியச் சூழலில் ஆ.மாதவனின் ஆளுமை தனித்துவமானது.யதார்த்தத்தில் இருந்து புதுமைக்கான பாலத்தை,பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டிய அளவில் அவர் பங்களிப்பு மிக முக்கியமானது.வட்டார வழக்கு எழுத்து வகையில் புறக்கணிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தவர் ஆ.மாதவன்.கேரளத் தமிழில் அவரது கதைகள்,அதனாலேயே மிளிர்வு கண்டன.கடைத் தெரு சார்ந்த அவரது சாமானியர்களின் அடையாளம் சாமானியமானது அல்ல.மீண்டும் மீண்டும் வாசித்து மகிழத்தக்க அளவில் இந்த நூல் காலங் கடந்து நிற்கக் கூடிய,பத்திரப்படுத்தி போற்றிப் பாதுக்காக்க வேண்டிய பொக்கிஷம். ரூ.300/- Tags: ஆ.மாதவன், இலக்கியம், பாரதி புத்தகாலயம்
No Comments