ரானா அயூப் 2010ஆம் ஆண்டு, அன்றைக்கு ‘தெஹல்கா’ (Tehelka) இதழில் பணியாற்றிய பத்திரிகையாளராகிய ரானா அயூப் ஒரு துணிச்சலான பத்திரிகை புலனாய்வுப் பணியை தன் உயிரைப் பணயம் வைத்து மேற்கொண்டார். 2001ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை குஜராத் மாநிலத்தில் காவல்துறை மற்றும் உள்துறை உயர் அதிகாரிகளாகப் பணி புரிந்தவர்கள், 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலைகள், பிறகு அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போலி என்கவுண்டர்கள் குறித்து மனம் திறந்து பேசியதை ரகசியமாக பதிவு செய்துள்ளார். குஜராத் அரசின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களும் அரசு இயந்திரமும் எவ்வாறு ஒரு சமூகப் படுகொலை நடைபெற காரணமாகவும், மௌன சாட்சியமாகவும் இருந்தனர் என்பதை அவர்களது வாக்கு மூலங்களாகவே கொண்டுவந்தார். அரசியல் காரணங்களால் அவரது நிறுவனம் அவரது பதிவுகளை பதிப்பிக்க மறுத்த நிலையில், ‘Gujarat files’ – குஜராத் கோப்புகள் என்ற பெயரில் தானே சொந்தமாக பதிப்பித்துள்ளார். நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘குஜராத் கோப்புகள்’ என்ற பெயரில் பாரதி புத்தகாலய வெளியீடாக… ரூ.170/- Tags: அரசியல், பாரதி புத்தகாலயம், ரானா அயூப்
No Comments