கீரனுர் ஜாகிர் ராஜா கீரனூர் ஜாகிர் ராஜாவின் இக்கட்டுரைத்தொகுப்பு நான் எதிர்பாராத அவருடைய ஒரு முகத்தைக் காட்டி என்னை மகிழ்விக்கிறது.தொகுப்பில் உள்ள17கட்டுரைகளில் அவர்30க்கு மேற்பட்ட படைப்பாளிகளைப் பற்றியும் அவர்களின் படைப்புகள் பற்றியும் நுட்பமான உளப்பூர்வமான வரிகளை எழுதியிருக்கிறார்.தஞ்சை பெரியகோவில் பற்றிய கட்டுரை மிகச்சிறப்பான மொழிநடையில் சரியான கோணத்தில் எழுதப்பட்ட ஓர் ஆபுர்வமான கட்டுரை என்பேன்.க.நா.சு பற்றிய கட்டுரை உண்மையில் அவருடைய பிறந்த நூற்றாண்டில் அவருக்குச் செய்யப்பட்ட கெளரவமான அஞ்சலி என்றே பார்க்கிறேன்.வைக்கம் முகமது பசீர் பற்றிய கட்டுரை ரொம்ப அழகாக எழுதப்பட்டுள்ள பசீர்க்கு மரியாதை செய்யச் சரியான மொழியில் எழுதப்பட்டுள்ள கட்டுரை.கீரனூர் ஜாகிர் ராஜாவின் இக்கட்டுரையின் பல வரிகள் மனசீலிருந்து வந்தவை போல அமைந்துவிட்டன.கட்டுரை இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் இத்தொகுப்பை வரவேற்போம். ரூ.90/- Tags: இலக்கியம், கீரனுர் ஜாகிர் ராஜா, பாரதி புத்தகாலயம்
No Comments