இரா ஜானகி நூலாசிரியர் உரையாசிரியர் போதகாசிரியரென வகுத்த மூவகை ஆசிரியரோடு யான் பரிசோதனாசிரியரென இன்னுமொன்று கூட்டி,இவர்தொழில் முன் மூவர் தொழிலினும் பார்க்க மிகக்கடியதென்றும் அவர் அறிவுமுழுவதும் இவர்க்கு வேண்டியதென்றும் வற்புறுத்திச் சொல்கின்றேன்.தூக்கினாலன்றோ தெரியுத் தலைச்சுமை?பரிசோதனாசிரியர் படுங் கஷ்டமும் ஓர் அரிய பழைய நூலைச் சுத்த மனச்சாட்சியோடு பரிசோதித்து அச்சிட்டார்க்கன்றி விளங்காது.இவையெல்லாம் அனுபவத்தாலன்றி அறியப்படாப் பொருள்கள்.ஒன்றற்கொன்று ஒவ்வாத இருபது இருபத்தைந்து பிரதிகளையும் அடுக்கி வைத்துக்கொண்டு என் கண்காணச் சிந்தாமணி பரிசோதனை செய்து பதிப்பித்த கும்பகோணம் வித்தியாசாலைத் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமத் வே.சாமிநாதையரைக் கேட்டால் இந்நல்வகையாசிரியர் பாட்டின் தாரதம்மியம் சற்றே தெரியலாம்.எனக்கு அவரும் அவருக்கு நானுமே சாட்சி ரூ.110/- Tags: இரா ஜானகி, இலக்கியம், பாரதி புத்தகாலயம்
No Comments