எஸ். செந்தில் குமார் விநோதமானதும், கொடூரமானதுமான வாழ்வினை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் கதை உலகம் இது. வேதனையைச் சொல்ல ஒரு துளி கண்ணீர் போதும், கண்ணீர் என்றால் என்ன என்று தெரிந்தவர்களின் முன்பு. கசப்பின் சுவையைக் கொண்ட வரிகளுக்குப் பின்னால், நின்று பார்க்கும் கதாபாத்திரங்கள் சில வேளைகளில் வெளியேறி வந்து வரிகளுக்கு முன் நின்று கொண்டு சிரிக்கிறார்கள். கையை விட்டுச் சென்ற கடந்த காலத்தின் மகிழ்வினாலான தருணங்கள் திரும்பவும் வந்தடையாதா என்று ஏங்குகிறவர்களாக இருக்கிறார்கள். இக்கதைகளுக்குப் பின்னால் இருக்கும் வெளிச்சங்களும், இருளும் மேலும் புனைவாக்கப்பட்டிருக்கிறது என்பது கதைகளின் செயல் வடிவம் சார்ந்து சாத்தியமானது. ரூ.80/- Tags: உயிர்மை, எஸ். செந்தில் குமார், சிறுகதைகள்
No Comments