நான் ஏன் நாத்திகன்?

August 20, 2016

பகத்சிங்

“பகத்சிங் ஒரு நாத்திகராக இருப்பதற்குக் கரணம் அவரது ஆணவமும் அகந்தையுமே என்று அவரோடு சிலகாலம் பழகிய தோழர்கள் கருதுவதாக அறிந்த பகத்சிங் அது அப்படியா என்று தனக்குள் பயணம் செய்து விடை காணும் புத்தகம் இது.தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான அமரர் ஜீவா அவர்களின் இலகுவான கூர்மையான மொழிபெயர்ப்பில் வந்துள்ளது.சிறுவயதில் கடவுள் பக்தராகவே பகத்சிங் இருந்துள்ளார்.தினசரி காலை மாலை பிரார்த்தனைகள் செய்கிறவராக காயதிரி ஜெபம் செய்கிறவராகவே இருந்தார்.அவருடைய தந்தையாரும் பக்திமானாகவே இருந்தார்.பின்னாட்களில் புரட்சிகர இயக்கங்களில் பங்கேற்கத் துவங்கிய பிறகு அவர் படித்த புத்தகங்களும் தோழர்களுடன் விவாதித்ததுமே அவரை நாத்திகராக மாற்றியது.அராஜகவாதத¢தில் நம்பிக்கை கொண்ட தலைவரான பக்குனின் எழுதிய கடவுளும் ராஜ்ஜியமும் எனூம் நூல்,நிர்லம்ப சாமியால் எழுதப்பட¢ட பகுத்தறிவு போன்ற நூல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.ஏகச் சக்ராதிபத்திய ஆதிக்க இருள் சூழ்ந்த தங்கள் நாட்டில் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த லெனின்,ட்ராட்ஸ்கி போன்றோர் பச்சை நாத்திகர்கள் என்பதை அறிந்தேன்.நானும் பச்சை நாத்திகனானேன் என்கிறார் பகத் சிங்.”

ரூ.10/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *