பட்டது யானை

August 31, 2016
வேல ராமமூர்த்தி
பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி கிராமம்.பெற்றோர் வேலுச்சாமித் தேவர் லக்ஷமி அம்மாள்.கல்லூரிப் படிப்போடு ராணுவத்துக்குப் போனவர்.துப்பாக்கி தூக்கிச் சுடும் போதும் வனங்களின் பூ நோகாமல் குறி வைத்தவர்.பிறந்த மண்ணில் சிந்திச் சிதறிக் கிடக்கும் மனுசப்பாடுகளை இலக்கியம் ஆக்கியவர்.மண் சார்ந்த,வல்லமைமிக்க,தனித்த ஓர் எழுத்து பாணியை தனதாக்கிய வேல ராமமூர்த்தி,பல்லாயிரம் பேரையும் இமைக்க மறந்து கேட்க வைக்கும் மேடைக் கதைசொல்லி பல்கலைகழகப் பாடங்களாகவும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுக் களஞசியமாகவும் ஆன இவரது கதைகள்,அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம்,ஃபிரெஞ்ச்,மலாய்,கொரியன் மற்றும் சீன மொழிகளிலும் ஆக்கம் செய்யப்பட்டுள்ளன.பல ஆண்டுகள் இந்திய அஞ்சல் துறைக்குள் அடைபட்டிருந்த இந்த ராணுவக் குதிரை,கட்டுடைத்து வெளியேறி,மதயானையாக…கொம்பனாக தமிழ் திரைப்படத் துறையில் வலம் வரத் தொடங்கி உள்ளது.

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *