பா.வீரமணி “உழைக்கும் மக்களின் உன்னதங்களைத் திரைப்பாடல்களாக நிறுவியதில் பட்டுக்கோட்டை என்னும் மக்கள் கவிஞனின் பங்கு மகத்தானது.கொள்கை கோட்பாடுகளடங்கிய ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் சொல்லும் விஷயத்தை எளிய மக்களின் மனத்தில் இரண்டே வரிகளில் விதைத்துச் செல்வது பட்டுக்கோட்டையாரின் உத்தி.பண்டித சிகாமணிகளெல்லாம் இவரின் படைப்புத்திறனைக் கண்டு வியந்து நின்றனர்.அத்தகைய பாட்டுக்காரனின் பாடல்களை ரசனையுடனும் ஆழ்ந்த மதிநுட்பத்திறனுடனும் பா.வீரமணி ஆய்ந்து செல்லும் அழகு அலாதியானது.பட்டுக்கோட்டையாரின் ஆளுமையைத் தமிழ்ச் சமூகம் எளிமையாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் இந்நூல் சிறப்புற வடிவம் கொண்டுள்ளது.” ரூ.100/- Tags: கலை/ஊடகம், பா.வீரமணி, பாரதி புத்தகாலயம்
No Comments