பிரபாத் பட்நாயக் மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்கிற கூக்குரல் காலந்தோறும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது.ஆனால் மனித குல விடுதலையே மார்க்சியத்தின் அடிப்படை நோக்கம் என்னும்போது அது முதலாளித்துவத்தில் சாத்தியமில்லை.அதற்கு முற்றிலும் வேறொரு சோசலிச சமூகம் அவசியமாகிறது.சோசலிசம் என்னும் அமைப்பில்தான் சமூக நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் இருக்கும் எண்ணங்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் இடையில் ஒத்திசைவு இருக்கும்.ஆனால் பிரச்னை எங்கே வருகிறது எனில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளை எங்கனம் புரிந்து கொள்வது?ஒன்றை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.மார்க்சியம் என்பது உறைந்து-போன உடலாக இருக்கும் கருத்துக்கள் அல்ல.மார்க்சியம் என்பது அதன் மூலக்கருவைச் சுற்றி காலத்துக்கு ஏற்றாற் போல அதன் ஸ்தூலமான நிலைமையை தீர்க்கமாக ஆய்ந்து தொடர்ந்து மறுசீரமைக்கப்படும் கருத்துப் பெட்டகமாகும்.இந்த மறு சீரமைப்பு சோவியத் யூனியனும் இதர பல சோசலிச நாடுகளும் சிதைந்து போன பின்னணியில் மூலதனத்தின் ஆதிக்கம் புதிய ரூபங்களை எடுத்துள்ள இன்றைய காலத்தில் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற கேள்விக்கான விடையாக இந்நூல் வந்துள்ளது. ரூ.10/- Tags: அரசியல், பாரதி புத்தகாலயம், பிரபாத் பட்நாயக்
No Comments