மீன்கள்

July 23, 2016

தெளிவத்தை ஜோசப் இந்நூலின் முதன்மையான கதையாக உள்ளது ‘மீன்கள்’. இதைத் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக நான் என்னுடைய ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ நூலில் குறிப்பிட்டிருந்தேன். மலையகத் தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் வாழும் வாழ்க்கையின் அழுத்தமான சித்திரத்தை சுருக்கமாக உருவாக்கிவிடுகிறது இக்கதை.இக்கதையை முதன்மையான கதையாக ஆக்குவது இதில் சொல்லாமல் சொல்லப் பட்டிருக்கும் அந்தத் தொழிலாளியின் இழிவின் கணம்தான். சுயவதையாக அவனில் நீடிக்கும் ஒரு தருணம் அது. உண்மையில் அதனூடாக நான் அவனைப் பார்க்கவில்லை, அவனுடைய மகள்களையே பார்க்கிறேன். அவர்கள்தான் கடைசியாகச் சுரண்டப்பட்டவர்கள். ஒடுக்கப் பட்டவர்களின் கடைசிநிலையில் இருப்பவர்கள்.பலகோணங்களில் திறக்கும் ஒன்பது முக்கியமான கதைகளின் தொகுதி இது. நம் மண்ணிலிருந்து உதிர்ந்து சென்ற நம் ரத்தங்கள் எப்படி வாழ்ந்தனர், எப்படிப் போராடினர், எப்படி எழுந்தனர் என்பதற்கான ஆவணம். ஆகவே இது நமது வரலாறு.

– ஜெயமோகன்

ரூ.100/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *