Rs.150.00
-சரவணன் சந்திரன்
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய இளைய தலைமுறையினரை மூன்று பெரும் தலைமுறைகளாக பிரிக்கலாம். சுதந்திரத்திலிருந்து 70கள் வரை இலட்சியவாதத்தின் காலம். 70 கலிலிருந்து 90 கள் வரை இலட்சியவாதங்கள் முறிந்து நிராசையும் தனிமையும் அன்னியமாதலும் நிரம்பிய காலம், அதுவே பல்வேறு அரசியல் எதிர்ப்பியக்கங்கள் எழுந்த காலமும் கூட. 70வதுகளுக்குப் பிறகு துவங்கி இப்போதுவரை தொடரும் காலத்தின் இளைஞர்கள் உலகம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடுகிறது சரவணன் சந்திரனின் இந்த நாவல். உலகமயமாதல் சூழலில் தனது இடம், அடையாளம் குறித்து எந்த பிடிமானமும் இல்லாத இளைஞர்களின் அந்தரங்க உலகம், அவர்களது மனித உறவுகள், சமூக உறவுகள் ஆகியவை தண்ணீரில் விழும் பிம்பங்களைப் போல் கலங்களாகவும் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன. அவநம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய காலத்தில் சஞ்சரிக்கும் இந்த நிகல்களுக்கிடையிலான உரையாடல்களும் போராட்டங்களும்தான் நம் காலத்தின் மொழியாக இருக்கின்றன. அந்த மொழியின் வழியே எழுதப் பட்ட ஒரு சமகால தமிழ் வாழ்க்கையின் கதைதான் ரோலக்ஸ் வாட்ச் .
No Comments