லைம்லைட்

August 19, 2016

ஸோகன்லால்

மலையாளத்தில் இதுவரை யாரும் சோதித்துப் பார்க்காத கருப்பொருளையும் கதைசொல்லும் முறைகளையும் கொண்டு புத்தம் புதிய ஒரு நாவல் சிற்பத்தை ஸோகன்லால் உருவாக்கியிருக்கிறார். டாக்டர். ஜார்ஜ் ஓணக்கூர் (மலையாள நாவல் எழுத்தாளர்) இன்று நமது திரையுலகில் நடக்கும் நிகழ்வுகளோடு ஒரு எழுத்தாளனின் எதிர் வினையாற்றலாகும் இது. எழுத்துக்களின் ஆற்றல் மூலம் இதை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது இயக்குநருமான ஒரு எழுத்தாளன் என்று கூறுவதில் மலையாளத் திரை உலகம் பெருமை கொள்ளலாம் ஜகதீஷ் (மலையாளத் திரைப்பட நடிகர்) எள்ளல் வட்டத்தினுள் நின்று கொண்டு மிக நுட்பமாக திரை உலகின் சிக்கல்களைக் குறித்து இங்கு உரக்கக் கூறியிருக்கிறார். திரைப்படத்¬த் தாண்டி வாழ்க்கையின் பிற துறைகளுக்கும் இந்த நுட்பமான பார்வை மிகவும் பொருந்துவதாகவே உள்ளது. லெனின் ராஜேந்திரன் (மலையாள திரைப்பட இயக்குனர்) மலையாள திரைப்படத்தின் வளர்ச்சிப் போக்கில் உள்ள எண்ணப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் என்னென்னவென்று புரிந்துகொள்ள இந்த நாவலை அன்புடன் நான் பரிந்துரைக்கிறேன் ஸ்ரீகுமாரன் தம்பி (மலையாளத் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர்)

ரூ.45/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *