ஆசிரியர்: பூவுலகின் நண்பர்கள் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்ததாம் நரி என்று கேட்டுள்ளோம் பசுமைப்புரட்சி என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி வியாபாரங்களில் நுழைந்த பன்னாட்டு நிறுவனங்கள் இன்று நமது வாழ்வின் மூலாதாரமான விதைத்துறையிலும் நுழையவிருக்கின்றன இதனால் வரும் அபாயத்தை நினைத்துப்பார்தோமானால் நமது வருங்காலத்தைக் குறித்த அச்சத்தைத் தோற்றுவிக்கிறது வடிவுரிமை என்ற பெயரில் நமது விதைகளையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் கபளீரம் செய்யத்துவங்கிவிட்டன. இனிமேல் தனது வயலை நம்பிக்கொண்டிந்த விவசாயி பன்னாட்டு நிறுவனங்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை வரும். எனவே இவ்வபாயம் குறத்து சிந்திக்க, விவாதிக்க நடைமுறைப்படுத்த இந்நூலை வெளியிடுகிறோம். ரூ.70/- Tags: இயற்கை விவசாயம், எதிர் வெளியீடு, பூவுலகின் நண்பர்கள்
No Comments