ஓவியர்:கி.சொக்கலிங்கம் வட்டம் சதுரம் முக்கோணம் செவ்வகம் கூம்பு அறுகோணம் உருளை பட்டை நீளத்தில் வடிவம் எல்லாம் அடங்கிடுமே!ஒன்றின் உருவம் அடிப்படையில் எந்த வடிவம் கண்டுபிடி! ரூ.60/-
மீனா தீராநதி, உயிர் எழுத்து மற்றும் இணையப் பக்கங்களில் எழுதி வரவேற்பிற்கும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளான கட்டுரைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ‘சித்திரம் பேசேல்’ என்பது அவ்வையின் ஆத்திச்சூடி. பொய்மொழிகளை மெய்போலத் தோன்றும் வண்ணம் பேசாதே என்பது பொருள். கடந்த சில ஆண்டுகளில் எழுத வந்து தனக்கென ஒரு இடத்தை வரித்துக்கொண்ட மீனாவின் இரண்டாவது நூல் இது. ‘ஊடகக் கவனிப்பு’ (Media Watch) எனும் திசையில் உருவாகியுள்ள சில காத்திரமான கட்டுரைகளும், முத்துப்பழனியின் ‘ராதிகா சாந்தவனம்’ எனும் காவியத்தின் அங்கமான சில கவிதைகளின் மொழிபெயர்ப்புகளும் தமிழுக்குப் புதியவை. வரலாற்றுத் திரு உருக்கள் மட்டுமல்ல எதிர்மறைப் பிம்பங்களும் கூட இங்கே எவ்வாறு தட்டையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை வ.வே.சுவை முன்வைத்து மீனா விவாதிப்பது இந்நூலின் இன்னொரு முக்கிய பங்களிப்பு. அரசியலும் அழகியலும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என நிறுவுகின்றன இந்நூலிலுள்ள கட்டுரைகள். ரூ.215/-