அருகில் வராதே

சாரு நிவேதிதா வாசகனோடு மிக நெருங்கிச் சென்று உரையாடும் எழுத்து முறைமைகளில் கேள்வி பதில்களுக்கு தனி இடம் உண்டு. சொல்லப்படும் பதில்களைவிட சொல்லுகிற நபரின் அல்லது கதாபாத்திரத்தின் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் சுவாரசியமுமே அந்த வடிவத்தை உயிருள்ளதாக மாற்றுகிறது. சாரு நிவேதிதா தனது இணைய தளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு இது. இவை வினா-விடைகள் என்பதைவிட சாரு தனது வாசகர்களுடன் தொடர்ந்து நடத்திவரும் நீண்ட உரையாடலின் தொடர்ச்சி என்று சொல்லலாம். முகமற்ற வாசகர்களின் கேள்விகளுக்கு சொல்லப்படும் பொதுவான பதில்களிலிருந்து மாறுபட்ட இந்த நூல் ஒரு அந்தரங்கமான தொனியை உருவாக்குகிறது. ரூ.120/-

நரகத்திலிருந்து ஒரு குரல்

  சாரு நிவேதிதா சாரு நிவேதிதா எழுதும் சினிமா விமர்சனங்கள் தமிழ் சினிமாவை அதன் அழகியல் தளத்திலும் சமூகத்தளத்திலும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துபவை. சர்வதேச சினிமாவின் தரத்தை நோக்கி நகர முயலும் புதிய முயற்சிகளை உற்சாகத்துடன் வரவேற்கும் சாரு, புதுமை என்ற பெயரில் உருவாக்கப்படும் பாசாங்குகளையும் படைப்பூக்கமற்ற வெற்று நகல்களையும் இக்கட்டுரைகளில் கடுமையாக நிராகரிக்கிறார். தமிழ் சினிமாவின் மொழியும் அடையாளமும் மெல்ல மாறிவரும் ஒரு காலகட்டத்தில் அந்த மாறுதலின் நுட்பங்களையும் சிக்கல்களையும் விமர்சன நோக்கில் இந்த நூல் பரிசீலனைக்கு ஆட்படுத்துகிறது. ரூ.180/-

மலாவி என்றொரு தேசம்

சாரு நிவேதிதா அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவுகூட ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பண்பாட்டு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை. மூன்றாம் உலக பண்பாடுகளின் கலாச்சார தனிமையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பண்பாடு குறித்த சில புதிய வெளிச்சங்களை அடையும் ஒரு முயற்சியே. அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான மலாவியிலிருந்து ஆனந்த் அண்ணாமலை எழுதிய கடிதங்களை சாரு நிவேதிதா தனது இணைய தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு அதற்கு பதிலும் எழுதினார். அதன் தொகுப்பே இந்த நூல். ரூ.140/-

திசை அறியும் பறவைகள்

சாரு நிவேதிதா இத்தொகுதியில் இடம்பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வைகளை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி நடையையும் தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்கும் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் பெரும் வசீகரமாக இருக்கிறது. இவை உருவாக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் வாசகனின் பழக்கப்பட்ட சிந்தனா முறையைக் கலைக்கின்றன. ரூ.180/-

கெட்ட வார்த்தை

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம்போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாருநிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார். ரூ.225/-

வாழ்வது எப்படி?

சாரு நிவேதிதா வாழ்வின் எளிமையான சுவாரசியமான சம்பவங்களை சாருநிவேதிதா இந்தக் கட்டுரைகளில் ஆர்வமூட்டும் வகையில் எழுதிச் செல்கிறார். மைக்கேல் ஜாக்ஸன், கனிமொழி, பீர்பால், வேலிமுட்டி , ரஜினியின் டைனிங் டேபிள் என்று பல்வேறு பொருள் குறித்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் வெவ்வேறு அனுபவங்களை வாசகனுக்குத் தருகின்றன ரூ.80/-

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதாவின் இலக்கிய-தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சார்த்தரிலிருந்து சுஜாதா வரை வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் சாருவின் பரந்து பட்ட இலக்கிய அக்கறைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவை ஒரு காலகட்டத்தின் கலை இலக்கிய மதிப்பீடுகள் தொடர்பான தீவிரமான விவாதங்களையும் தோற்றுவிக்கின்றன ரூ.170/-

ரெண்டாம் ஆட்டம்

சாரு நிவேதிதா பதினேழு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ‘ரெண்டாம் ஆட்டம்’ நாடகம் நிகழ்த்தப்பட்டபோது அதில் பங்கெடுத்த சாரு நிவேதிதாவும் அவரது நண்பர்களும் சக நாடகக் கலைஞர்களாலும் எழுத்தாளர்களாலும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அப்போது அது தொடர்பாக நிகழ்ந்த சர்ச்சைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் அகஸ்தோ போவாலின் ‘கண்ணுக்குப் புலப்படாத தியேட்டர்’ என்ற கட்டுரையின் தமிழாக்கமும் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைகள் இன்று நினைவுகூரப்படுவதன் காரணம் கலை இலக்கியப் பிரதிகளின் மீதான கண்காணிப்பும் ஒடுக்குமுறைகளும் முன்னெப்போதையும்விட கடுமையாகி வருகின்றன என்பதாலேயே. அந்த வகையில் இந்த சர்ச்சையை முன்னிட்டு வைக்கப்படும் வாதங்கள் இன்றும் காலப்பொருத்தமுடையவை என்பதில் சந்தேகமில்லை. ரூ.60/-

தாந்தேயின் சிறுத்தை

சாரு நிவேதிதா கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்தலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயங்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால் நூற்றாண்டு நவீனதமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன. ரூ.230/-

எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது

சாரு நிவேதிதா தமிழில் பத்தி எழுத்திற்கு ஒரு தனி மொழியை உருவாக்கியவர் சாருநிவேதிதா. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கென்று பிரத்தியேகமான அனுபவங்கள் தேவை இல்லை, அவன் எல்லோரும் வாழ்கிற வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளை தனது பார்வையாலும் மொழியாலும் அசாதாரணமானதாக, பிரத்தியேகமானதாக மாற்றிவிடக் கூடியவன் என்பதற்கு அவரது இந்தப்பத்திகள் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன. சாருவின் இந்தப் பத்திகளின் மைய ஓட்டமாக இருப்பது எங்கும் இடையறாது பெருகும் அபத்தமே. எண்ணற்ற கோணல்களும் பிறழ்வுகளும் கொண்ட அபத்தம் இது. இந்த அபத்தத்தை அவர் விமர்சிப்பதோ ஆவணப்படுத்துவதோ இல்லை. மாறாக அவர் அதை கேளிக்கையாகவும் பரிகாசமாகவும் மாற்றுகிறார். அதுவே இந்தக் கட்டுரைகளை உற்சாகமுடன் வாசிக்கத் தூண்டுகிறது. ரூ.160/-