Product Description
டாக்டர் நாராயண ரெட்டி
இந்திய கலாசாரத்தால் செக்ஸ் என்பது இன்னும் மறைபொருளாகவும் வெளிப்படையாக அதைப்பற்றிப் பேசுவதும், அறிந்துகொள்வதும் ஆகாத செயல் என்ற நிலைதான் உள்ளது. பெரும்பாலான அந்தப்புரங்களில் தாம்பத்தியம் என்பது சண்டை சச்சரவுகளில்தான் முடிகின்றன. விவாகம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே விவாகரத்துக் கேட்டு கோர்ட் வாசலில் வந்து நிற்கும் இளம் தம்பதியினர் இன்று அதிகரித்துவிட்டனர். இதற்கு மூல காரணம் தாம்பத்தியம் பற்றி கணவனுக்கும் மனைவிக்கும் இடையே புரிதல் இல்லாமைதான். பருவ வயதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் நிகழும் ரசாயன மாற்றங்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தி செக்ஸ் மீதான பார்வையை வேறு கோணத்தில் கொண்டுபோய்விடுகிறது. செக்ஸ் பற்றிய அனைத்து விஷயங்களையும் அலசி, அந்தப்புரத்தை நம் பக்கமாகத் திருப்புகிறது இந்த நூல். ஆண், பெண் இரு பாலரையும் பதின்ம வயது தொடங்கி, முதுமை எல்லை வரை குறுக்குவெட்டாக ஆராய்ந்து அனைத்து விதமான செக்ஸ் சந்தேகங்களுக்கும், வாசகர்கள் எழுப்பிய ஐயங்களுக்கும் சரியான விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி. டாக்டர் விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் இதழ்தோறும் விளக்கமளித்தார். அந்தத் தொடரின் முழுத் தொகுப்பே நூலாகியிருக்கிறது. படுக்கையறை சங்கதிகளை விரசம் இல்லாமல் கூறி அனைத்துக்கும் விடை கூறும் இந்த நூல், செக்ஸ் மீதான பார்வையை மாற்றிவிடும் என்பது நிஜம்.
Reviews
There are no reviews yet.