Description
டாக்டர் சுதா சேஷய்யன்
ஆலயதரிசனம் செய்வது என்பதே ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்களுக்கு அலாதியான ஒரு பேரின்பம். அதுவும் தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற ஈசனின் திருத்தலங்களுக்குச் செல்வது என்றால் கேட்க வேண்டுமா?! ‘சக்தி விகடன்’ இதழில் தொடராக வந்துகொண்டிருக்கும் ‘தேவாரத் திருவுலா!’, புத்தக வடிவில் முதல் பாகமாக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வாசகர்கள் தங்களின் ஆன்மிகப் பயணத்தை ஆனந்தத்துடன் தொடர இதோ இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் சிதம்பரம் முதல் திருவையாறு வரையிலான ஈசனின் பதினெட்டு திருத்தலங்களை முதலில் தரிசித்தோம். அதன் தொடர்ச்சியாக குரங்கணில்முட்டம் தொடங்கி திருப்புத்தூர் வரையிலான பதினாறு தலங்களில் வீற்றிருக்கும் முக்கண் முதல்வனின் ஆலயங்களுக்குச் சென்று அருள்மழையில் இன்பமாக நனையப்போகிறோம். ஈசனின் திருத்தலங்களுக்கு பக்திப் பரவசத்தோடு சென்று வணங்கி, அப்பெருமான் நடத்திய திருவிளையாடல் கதைகளை சுவைபட விளக்குகிறார் டாக்டர் சுதா சேஷய்யன். பக்தி மணம் கமழும் எழுத்துநடை, ஒவ்வொரு திருத்தலங்களையும் முழுவதுமாக நேரில் கண்டு இன்புற்ற மேன்மையான அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டும்போது, நம்மு
ரூ.100/-
Reviews
There are no reviews yet.