சார்லஸ் டார்வின்

வெ. சாமிநாத சர்மா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை நிலாவும் குரங்கும்.மிகச்சிறந்த எழுத்தாளரான செ.யோகநாதன் குழந்தைகளுக்கென நிறைய கதைகளை தொகுத்துள்ளார்.அவற்றிலிருந்து சில கதைகள். ரூ.15/-

மைக்கல் பாரடே

ஆயிஷா இரா.நடராசன் இந்நூலில் அரிய கண்டுபிடிப்பான மின்காந்தத் தூண்டலின் விதியினைக் கண்டுபிடித்த விஞ்ஞானியின் வாழ்க்கை நாடக வடிவில் விரிகிறது. ரூ.15/-

சர் ஐசக் நியூட்டன்

வெ. சாமிநாத சர்மா 1642ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்25ஆம் தேதி பிறந்து1727ஆம் ஆண்டு மார்ச் மாதம்20ஆம் தேதி மறைந்த சர்.ஐசக் நியூட்டனின் வாழ்க்கைக் கதையின் சில பக்கங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் புத்தகம்.நியூட்டனின் சுவையான செய்திகளை உள்ளடக்கிய இப்புத்தகம் இளம் வாசகர் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லப் படவேண்டிய ஒன்று. ரூ.15/-

தாமஸ் ஆல்வா எடிசன்

வெ. சாமிநாத சர்மா “கி.பி.1492இல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டான்.அதன் பிறகு ஐரோப்பா அங்கு போனது.லட்சக்கணக்கான சுதேசிகளைக் கொன்று அவர்களுடைய எலும்புக் கூடுகளின் மீதுதான் ஐரோப்பிய ஆதிக்கம் என்கிற கட்டடம் அமைக்கப்பட்டது.அப்படி அங்கு குடிபோன ஒரு குடும்பத்தின் வாரிசுதான் தாமஸ் ஆல்வா எடிசன் என்று துவங்கும் இப்புத்தகம் எடிசனின் வாழ்க்கை வரலாற்றை1949லேயே தமிழர்களுக்குச் சொல்லுவதற்காக எழுதப்பட்டதாகும்.இப்புத்தகம்.குழந்தைகளுக்கும் அவசியம் வாங்கித் தர வேண்டிய புத்தகம்.” ரூ.15/-

மனிதக் கதை

பி.பி.சான்ஸ்கிரி பூமி எப்போது தோன்றியது,பூமியில் உயிர் எப்போது உருவானது,உயிர் என்றால் என்ன,உயிரினங்களின் வளர்ச்சி,குரங்கிலிருந்து மனிதன் உருமாறிய விதம்,மனித வாழ்க்கையின் பன்மைகள்,ஒற்றுமைகள்,கற்காலம்,மனித வாழ்க்கைக்கு தேவையான கருவிகளை தயார் செய்தல்,உணவு சேகரிப்பு,புதிய கற்காலம் மனித நாகரிக வளர்ச்சி,வர்க்க சமூகங்களின் துவக்கம் ஆகியவைகளைப் பற்றி ஆழமான அறிமுகம் எளிய தமிழில் படங்களுடன் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ரூ.120/-

எதிர்பாராத கண்டுபிடிப்புகள்

பேரா.சோ.மோகனா எல்லா கண்டுபிடிப்புகளுக்குப் பின்னும் ஏதோ ஓர் இரகசியம் இருக்கிறது.நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் எதிர்பாராமல் யாரோ கண்டுபிடித்ததுதான்.பல எதிர்பாராத கண்டுபிடிப்புகள் பற்றி நாம் எதிர்பார்க்காத விஷயங்கள் நிரம்பிய புத்தகம் ரூ.25/-

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கட்டுரைகளும் உரைகளும்

ஈஸ்வர சந்தானமூர்த்தி,ஆர்.பெரியசாமி உலகமே வியந்த சார்பியல் தத்துவம் என்ற அறிவியல் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் ஐன்ஸ்டின்.இவர் வெறுமேன விஞ்ஞானி மட்டுமல்ல.மனிதர்களும்,விலங்குகளும் வாழுகிற இந்தச் சமூகத்தின் வழியே அறிவியலின் இடம் என்ன?என்பதை அறிந்து செயலாற்றியவர்.மனிதர்களின் வாழ்க்கைமுறையை சோசலிச நடைமுறையில்தான் மேம்படுத்த முடியும்.அதற்கான அறிவியலையும்.தத்துவத்தையும் இணைத்த ஐன்ஸ்டினின் கட்டுரைகளைக் கொண்ட நூல். ரூ.60/-

உலக பெண் விஞ்ஞானிகள்

ஆயிஷா இரா.நடராசன் “மற்ற துறைகளைப் போலவே விஞ்ஞானத் துறையிலும் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு அளப்பரியது.ஆனால் பெண் விஞ்ஞானிகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர்.பெரும்பாலும் பெண் விஞ்ஞானிகளும் மிக சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.அந்த இருட்டடிப்பு செய்யப்பட்ட24பெண் விஞ்ஞானிகளைப் பற்றிய அறிமுகமே இந்நூல்.” ரூ.70/-