கொ.மா.கோ.இளங்கோ ஒரு பலூன் உங்களையே சுற்றிச்சுற்றி அலைந்ததுண்டா? நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களைத் தொடர்ந்து வந்து மகிழ்வித்ததுண்டா? உங்களோடு கதை பேசியதுண்டா? நீங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு உங்களைத் தேடி வந்ததுண்டா? நீங்கள் பெற்ற தண்டனைக்காக யாரையும் தட்டிக் கேட்டதுண்டா? நீங்கள் தேம்பித் தேம்பி அழுதபோது உங்களைத் தேற்றியதுண்டா? பாரீஸ் நகரில் வசிக்கும் பாஸ்கல் என்ற சிறுவனது வாழ்க்கையில் இவை அத்தனையும் நிகழ்ந்தது. உயிர் அற்ற ஒரு பொருளைக்கூட அன்பினால் வசப்படுத்த முடியும் என்று எளிமையாக விளக்குகிறது ‘ரெட் பலூன்’ புத்தகம். குழந்தைகள் உலகில் நேசமும் நம்பிக்கையும் கொட்டிக் கிடப்பதை உணர்த்தும் கதை. ரூ.35/-
அருணன் அறிவியல் வளர்ச்சி,அறிவுதேடல்,தமிழ்,தமிழிலை காலத்தோடு வாழ,காலத்தோடு ஓட கட்டாயப்படுத்துகிறது.இருப்பினும் மரபின் தொடர்ச்சி இல்லாமல்,வேர்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் நிகழும் அடுத்தக் கட்டப் பாய்ச்சல் உள்ளீடற்றது.நமது மரபின் நமது வேரின் அற்புதக் களஞ்சீயமான சங்கத்தமிழ் இலக்கியப் புதையலை,காலந்தோறும் பயில்வதும்,உணர்வதும்,சொற்களின் புதுப்புது அர்த்தங்களை வரலாற்றுப் பொருள் முதல்வாதப் பின்னணியில் தெளிவதும் தேவை. ரூ.25/-
ஈரோடு தமிழன்பன் தமிழ் சூழலில் மறக்கப்பட்ட ஆளுமைகளையும் தொகுக்கப்படாத ஆவனங்களையும் கவனப்படுத்தப்படாத பனுவல்களின் பரிமாணங்களையும் ஆவனப்படுத்தும் முயற்சியே’அறியப்படாத தமிழ் உலகம்’எனும் மலர்.இம்மலர் தமிழிலியல் வரலாற்றின் மெளனங்களின் மீதான தர்க்கபூர்வமான விமர்சனமாகவும் புதிய ஆவனமாகவும் அமைத்துள்ளது. ரூ.225/-
அ.கோகிலா தமிழ் பதிப்புலகம் புத்தகம் பேசுது சிறப்பு மலர் ரூ.195/-
கீரனுர் ஜாகிர் ராஜா கீரனூர் ஜாகிர் ராஜாவின் இக்கட்டுரைத்தொகுப்பு நான் எதிர்பாராத அவருடைய ஒரு முகத்தைக் காட்டி என்னை மகிழ்விக்கிறது.தொகுப்பில் உள்ள17கட்டுரைகளில் அவர்30க்கு மேற்பட்ட படைப்பாளிகளைப் பற்றியும் அவர்களின் படைப்புகள் பற்றியும் நுட்பமான உளப்பூர்வமான வரிகளை எழுதியிருக்கிறார்.தஞ்சை பெரியகோவில் பற்றிய கட்டுரை மிகச்சிறப்பான மொழிநடையில் சரியான கோணத்தில் எழுதப்பட்ட ஓர் ஆபுர்வமான கட்டுரை என்பேன்.க.நா.சு பற்றிய கட்டுரை உண்மையில் அவருடைய பிறந்த நூற்றாண்டில் அவருக்குச் செய்யப்பட்ட கெளரவமான அஞ்சலி என்றே பார்க்கிறேன்.வைக்கம் முகமது பசீர் பற்றிய கட்டுரை ரொம்ப அழகாக எழுதப்பட்டுள்ள பசீர்க்கு மரியாதை செய்யச் சரியான மொழியில் எழுதப்பட்டுள்ள கட்டுரை.கீரனூர் ஜாகிர் ராஜாவின் இக்கட்டுரையின் பல வரிகள் மனசீலிருந்து வந்தவை போல அமைந்துவிட்டன.கட்டுரை இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் இத்தொகுப்பை வரவேற்போம். ரூ.90/-
E.N. Thanikachala Mudaliar Viruttam has been the most popular Tamil prosodic form from the days of silappathikaram. This volume draws the attention of the Tamil scholarly world to the pioneering studies of E.N. Thanikachala Mudaliar on viruttam. Consisiting of two studies, the first is a lecture titiled ‘The Evolution of Tamil Viruttams’ delivered in 1991-probably the first lecture on Tamil prosody ever to be delivered before a learned audience – and serialized in 1913-14 in Siddhanta Dipika. Twenty-five years later, in 1938,he rewrote it afresh recalling his earlier study. ரூ.90/-
வெ.பெருமாள்சாமி வெ.பெருமாள்சாமியின் சங்க இலக்கியக் காட்சிகள் நூல் அண்மைகாலத்தில்வெளிவந்துள்ள சங்க இலக்கியம் பற்றிய நூல்களில் முக்கியமானதும் தரமானதும் ஆகும்.இந்நூல் சங்க இலக்கியம் பற்றிய புதிய பாதைகளைத் திறந்து வைத்துள்ளது.இந்நூலைப் படித்தப்பின்னர் உரையாசிரியர்களின் உரையைக்கூட புதிய பார்வையுடன் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் புரிகிறது.சொல்லவரும் செய்தியை தக்க ஆதாரங்களுடன் சொல்வதற்கேற்ற புலமையும் தெளிவும் இருப்பதால் சொல்லும் கருத்திலும் தெளிவு இருக்கிறது.பேரா.பத்மாவதி விவேகானந்தன் ரூ.110/-
கே முத்தையா சங்க இலக்கியங்கள் தரும் காட்சி வர்க்கபேதமற்ற வறுமையற்ற பொற்காலம் என்று நினைப்பது தவறு.அது நிலவுடமை மன்னராட்சியின் காலம்.அதில் ஆதிக்கம் புரிந்தவர்கள் மன்னர்கள்,நிலக்கிழார்கள்.உழைப்போர் அவர்களுக்குக் கீழ் உரிமையற்றிருந்தனர்.பிற நாடுகளைத் தாக்கி அழித்துச் சிறைபிடித்துக் கொண்டு வரப்பட்ட அடிமைகள் என்ற பாகுபாட்டுடன் இருந்த காலம் அது ரூ.20/-
இரா ஜானகி நூலாசிரியர் உரையாசிரியர் போதகாசிரியரென வகுத்த மூவகை ஆசிரியரோடு யான் பரிசோதனாசிரியரென இன்னுமொன்று கூட்டி,இவர்தொழில் முன் மூவர் தொழிலினும் பார்க்க மிகக்கடியதென்றும் அவர் அறிவுமுழுவதும் இவர்க்கு வேண்டியதென்றும் வற்புறுத்திச் சொல்கின்றேன்.தூக்கினாலன்றோ தெரியுத் தலைச்சுமை?பரிசோதனாசிரியர் படுங் கஷ்டமும் ஓர் அரிய பழைய நூலைச் சுத்த மனச்சாட்சியோடு பரிசோதித்து அச்சிட்டார்க்கன்றி விளங்காது.இவையெல்லாம் அனுபவத்தாலன்றி அறியப்படாப் பொருள்கள்.ஒன்றற்கொன்று ஒவ்வாத இருபது இருபத்தைந்து பிரதிகளையும் அடுக்கி வைத்துக்கொண்டு என் கண்காணச் சிந்தாமணி பரிசோதனை செய்து பதிப்பித்த கும்பகோணம் வித்தியாசாலைத் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமத் வே.சாமிநாதையரைக் கேட்டால் இந்நல்வகையாசிரியர் பாட்டின் தாரதம்மியம் சற்றே தெரியலாம்.எனக்கு அவரும் அவருக்கு நானுமே சாட்சி ரூ.110/-
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் மார்க்சியப் பார்வையில் இந்தியாவின் சமூக கலாச்சார வளர்ச்சியினை விவரிக்கிறது.இந்தியச் சமூகத்தை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்கிறது.நீண்ட நெடுங்கால இந்தியச் சமுதாய வளர்ச்சியினையும் மாறுதல்களையும் மேலும் ஆரியர்கள் வருகைக்கு முன்னாலேயே அவர்களை காட்டிலும் உயர்வான கலாச்சார வளர்ச்சி பெற்றிருந்தவர்களாக இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த மக்கள் இருந்தனர் என்பதையும் இம்.எம்.எஸ்.எடுத்துக் காட்டியுள்ளார். ரூ.40/-