சொல்லித் தீராதது

ம. மணிமாறன் மணிமாறன் உருவாக்கும் விமர்சனக் கருத்துகள் ரசனை அடிப்படையிலானவை. தேடித்தேடி வாசிப்பதும், வாசித்தவற்றின் மீதான தனது அபிப்பிராயங்களி இதழ்களில் எழுதுவதும் தலையாயக் கடமை எனக் கருதும் இவர் தமிழ்ப் புனைவிலக்கிய வகைமையின் தீராக் காதலர். நேற்றைக்கு வெளியான நாவலை இன்றைக்குள் படித்துவிட்டு ரசனையுடன் பேசுகிற இவரைப் போன்ற தீவிரப் படிப்பாளிகள் தமிழுக்குத் தேவைப்படுகிறார்கள். வாசிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தன் கருத்துக்களை முன்னிறுத்துவதாலும் இவர்களிப் போன்றவர்களின் முக்கியத்துவம் அதிகமாகிறது. சொல்லித் தீராதது நூலில் மணிமாறன் புத்தகங்களை அணுகியிருக்கிற விதம் நுட்பமானது. படைபாளியின் ஆன்மாவோடு நெருங்கத் தெரிந்த வாசகனையும், விமர்சகனைக் கடந்த அவதானிப்பாளனையும் இவருள் காண்கிறேன். ரூ.175/-

சுய விமர்சனம்

கீரனூர் ஜாகிர்ராஜா ஒரு நிகழ்வை சாதாரணமாக கவனிப்பதற்கும் அசாதாரணமாக படைப்பு மனோபாவத்துடன் அணுகுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.இந்த அசாதாரணமான கவனிப்பு முறைதான் படைக்கத் தூண்டுகிறது. ரூ.120/-

சி​றைப்பட்ட கற்ப​னை

ஆசிரியர்: வரவர ராவ் வரவர ராவ் பிரபலமான தெலுங்கு கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர் தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்றிய இப்படிப்பட்ட அமைப்புகளில் முதலாவது இதுதான் . நக்சல்பாரி, ஸ்ரீகாகுளம், ஆதிவாசி விவசாயிகள் புரட்சி ஆகியவற்றால் நேரடியாகத் தூணடப்பட்டது இது. பத்து கவிதைத் தொகுதிகளின் ஆசிரியர். இவரது கவிதைகள் இந்தியாவின் பலமொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேச அரசாங்கத்திற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் 2000ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தை இந்தியாவில் முதல்முதலாக நடந்தது அப்போது மாவோயிஸ்டுகளின் பிரதிநிதியாகவும் அதில் பங்கேற்றவர். ரூ.150/-

சித்திரம் பேசேல்

மீனா தீராநதி, உயிர் எழுத்து மற்றும் இணையப் பக்கங்களில் எழுதி வரவேற்பிற்கும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளான கட்டுரைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ‘சித்திரம் பேசேல்’ என்பது அவ்வையின் ஆத்திச்சூடி. பொய்மொழிகளை மெய்போலத் தோன்றும் வண்ணம் பேசாதே என்பது பொருள். கடந்த சில ஆண்டுகளில் எழுத வந்து தனக்கென ஒரு இடத்தை வரித்துக்கொண்ட மீனாவின் இரண்டாவது நூல் இது. ‘ஊடகக் கவனிப்பு’ (Media Watch) எனும் திசையில் உருவாகியுள்ள சில காத்திரமான கட்டுரைகளும், முத்துப்பழனியின் ‘ராதிகா சாந்தவனம்’ எனும் காவியத்தின் அங்கமான சில கவிதைகளின் மொழிபெயர்ப்புகளும் தமிழுக்குப் புதியவை. வரலாற்றுத் திரு உருக்கள் மட்டுமல்ல எதிர்மறைப் பிம்பங்களும் கூட இங்கே எவ்வாறு தட்டையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை வ.வே.சுவை முன்வைத்து மீனா விவாதிப்பது இந்நூலின் இன்னொரு முக்கிய பங்களிப்பு. அரசியலும் அழகியலும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என நிறுவுகின்றன இந்நூலிலுள்ள கட்டுரைகள். ரூ.215/-

சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்

  கவின் மலர் தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒருபெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்என்று ஏட்டளவில் மட்டும் சொல்லிக்கொடுக்கும் நம் கல்வி முறை சாதி ஒழிப்பு குறித்து என்றேனும் பேசியிருக்கிறதா?கல்விமுறை மட்டுமல்ல, நம் வீடுகளும் குடும்பங்களும் சாதி & மத மறுப்புத் திருமணங்களை ஏற்றுக்கொள்ளுமானால், சிறு வயதிலேயே சாதி என்பது உயிர்கொல்லி என்கிற கருத்தை பிஞ்சு மனங்களில் ஏற்றினால், இனி வரும் தலைமுறையிலாவது சாதி குறித்த வெட்டிப் பெருமிதங்களும், அதன் காரணமாக நிகழும் கௌரவக்கொலைகளும் ஓரளவுக்கேனும் குறையும் என்று நம்பலாம். ரூ.150/-

சாத்தானை முத்தமிடும் கடவுள் Category: Articles.

சாத்தானை முத்தமிடும் கடவுள் ஜி . கார்ல் மார்க்ஸ் கார்ல் எழுத்துக்களின் இன்னொரு முக்கியமான பண்பு அவை ideological  (கருத்து நிலை) சுமையற்றவை என்பது. அவர் எந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கருத்து கூற விரும்புகிறாரோ அதற்கான கருத்தியலை, அவர் அதற்குள்ளிருந்தே உருவாக்கிக் கொள்கிறார். பெரும்பாலும் பிரச்சினைகளை நுணுக்கமாகப் பார்க்காமல் பொதுப்புத்தி சார்ந்து கருத்துக்கள் வெளிவருவதை கார்ல் மார்க்ஸ் கூர்மையாகப் பார்க்கிறார். அவற்றை விமர்சிக்கிறார். மறுக்கிறார். அந்தவகையில் சமூக ஊடகங்களில் மேலெழுந்து வந்து ஒரு பத்து நாட்கள் ஆட்டம் காட்டிவிட்டுப் பின் மறைந்து போகும் நீர்க்குமிழிகள் போன்ற கருத்துகளை விமர்சிக்கும் வகையில் ‘சமூக ஊடகங்களின் மனச்சாட்சியாகவும்’ அவர் தன்னை நிறுத்திக் கொள்கிறார். ரூ.180/-

சங்க கால சாதி அரசியல்

சங்க கால சாதி அரசியல் கௌதம சித்தார்த்தன் தமிழின் தொன்மையான சங்ககால சாதி சமூகத்தின் வாழ்வியலை ஆய்வு செய்யும் பெரும்பான்மையான ஆய்வாளர்கள், பெரும்பாலும் அச்சு வடிவம் சார்ந்த நூல்களின் ஆவணங்களையோ, அரசு சார்ந்த ஆவணங்கள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், கைபீதுகள், ஆங்காங்கு வாய்மொழியாகக் கேட்டு பதிவு செய்யப்பட்ட மேலைநாட்டாரின் குறிப்புகள், சங்ககால இலக்கிய உரையாசிரியர்கள் அள்ளிவிட்ட கருத்துப் பெட்டகங்கள்… போன்ற அச்சு வடிவம் பெற்ற ஆவணங்களை மாத்திரமே கணக்கில் எடுத்துக் கொண்டுதரவுகளை முன்வைக்கும் போக்குதான் இன்றளவிலும் கைக்கொள்ளப்படுகிறது. இது ஒருவிதமான ஆய்வு அரசியல். பண்டைய விளிம்புநிலை மக்களின் வாழ்வியல்களைக் கணக்கில் கொள்ளாமல் ஆய்வை முன்வைப்பதென்பது முழுமையடைந்ததாக இருக்காது. விளிம்புநிலையாளர்களின் வாழ்வியலை நுட்பமாகத் தேடுவதும் நுண்ணுணர்வுடன் ஆய்வு செய்வதும் இன்றைய பின்காலனியச் சூழலில் மிகமிக முக்கியமான ஒன்று. ரூ.80/-

காடுகளுக்காக ஒரு போராட்டம்

சிக்கோ மென்டிஸ் நில்லுங்கள்! போதும்! கொலைகள் போதும். அழிவும் துன்பமும், வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகள், சுற்றுச்சூழல் நாசங்கள் போதும். நாம் அனைவரும் ஒன்றாக எழுவோம்; அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம். சிக்கோ மென்டிசின் உயிர்த்தியாகம் வீண்போக கூடாது. அமேசானின் மழைக்காடுகளைக் காக்க அவர் போராடினார். எல்லாக் காடுகளையும், காட்டுயிர்களையும் காக்க நாம் போராடுவோம். ரூ.120/-

கடவுள் கற்பனையே

புரட்சிகர மனித வரலாறு ஏ.எஸ்.கே ஜாதி, மதம், கடவுள், ஜாதிக் கொடுமைகள், மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் கடிந்தொழிந்தால்தான், விஞ்ஞான வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் மனிதன் மனிதனாகத் திகழ முடியும். முற்போக்கு எண்ணங்களுக்கு இடம் கொடுப்பான். இயற்கையும், சமுதாயமும் சில கோட்பாடுகளின் அடிப்படையில்தான் இயங்குகின்றன; இக்கோட்பாடுகள் எவை – இவற்றைப் புரிந்து கொண்டு எவ்வாறு செயல்பட வேண்டும், புதிய சமுதாயத்தை சமைக்க வேண்டும், என்று எடுத்துச் சொல்லவும் விஞ்ஞான அடிப்படையில் சமுதாயத்தை காண்பது தான் உண்மை, என்பதனை ஓரளவு விளக்கவுமே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ரூ.90/-

ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே !

நலங்கிள்ளி கல்வித் துடிப்பிருந்தும் தெளிவில்லாது தடுமாறும் தமிழ்ப் பெற்றோர் – கல்விக் கொள்கையா கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையிலிருக்கும் அரசினர் அதிகார வர்க்கத்தினர் – துறைதோறும் துறைதோறும் தாழ்வுற்று வறுமை மிஞ்சிய தமிழகத்தை மீட்டுயர்த்தப் போராடும் தமிழ்த் தேசியர்கள் – சாண் ஏறினால் முழம் சறுக்குவது ஏனென்று தெரியாமல் திகைப்புறும் சமூகநீதிக்காரர்கள் – மதிப்புக்குரிய ஆசிரியப் பெருமக்கள் – மாண்பமைக் கல்வியாளர்கள்… அத்தனைப் பேரும் இந்நூலைக் கசடறக் கற்றுத் தெளிந்தால் கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை மீளக் காண்பதற்குத் தத்தமக்குரிய பங்களிப்புச் செய்யலாம். எளிய தமிழ்வழிக் கல்விப் பற்றாளராக எனக்கு அறிமுக-மாகி, இந்நூலில் சமூகநீதிக் கல்வியாளராக மலர்ச்சி பெற்றுள்ள தோழர் நலங்கிள்ளியிடமிருந்து தமிழ்ச் சமூகம் நிறைய எதிர்பார்க்கிறது. அடியேனும் கூட. ரூ.60/-