எம் தமிழர் செய்த படம்

சு. தியடோர் பாஸ்கரன் தமிழ் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, போக்கு ஆகியவற்றின் சில முக்கியப் பரிமாணங்கள் மீது கவனத்தைச் செலுத்த இந்தப் புத்தகம் நம்மைத் தூண்டுகிறது. அதிலும் தென்னிந்திய சினிமாவின் மௌன சகாப்தத்தைப் பற்றிய விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்கின்றது. பிரித்தானிய அரசு தமிழ் சினிமாவை எதிர்கொண்ட விதம், திரைப்படத் தணிக்கை, ஆவணப்படங்கள் போன்ற பொருட்கள் பற்றி விரிவாக ஆராய்கின்றது. தமிழ் இலக்கியத்திற்கும் திரைக்கும் உள்ள உறவை உற்றுநோக்குகின்றது. தமிழ்ப்படங்களில் பாட்டின் இடம் என்ன, பாத்திரப் பேச்சின் தன்மைகள் ஒரு திரைப்படத்தின் வளத்தைச் சிதைக்கின்றனவா போன்ற சினிமா அழகியல் சார்ந்த கேள்விகளை எழுப்பித் தமிழ்த் திரை பற்றிய ஓர் ஆரோக்கியமான கரிசனத்தை ஏற்படுத்த இந்நூல் முயலுகின்றது ரூ.100/-

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

சு. தியடோர் பாஸ்கரன் சு. தியடோர் பாஸ்கரனின் இந்நூல் நமது சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றிய அபூர்வமான தகவல்களை சுயமான பார்வையுடன் முன் வைக்கிறது. இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. வனஉயிர்கள், தாவரங்களின்அழிவு தொடர்பாக தியடோர் பாஸ்கரன் முன்வைக்கும் எச்சரிக்கைகள் இயற்கையின் மீதான பேரன்பிலிருந்தும் இயற்கையின் நீதி, அறம் குறித்த தார்மீகக் கேள்விகளிலிருந்தும் பிறக்கின்றன. சுற்றுச் சூழல் பிரச்சினைகள் தொடர்பாகத் தமிழில் எழுதப்பட்ட அரிய ஆவணம் இது. ரூ.120/-

தாமரை பூத்த தடாகம்

சு. தியடோர் பாஸ்கரன் தமிழில் சுற்றுச் சூழல் சார்ந்த பார்வைகளையும் சொல்லாடல் களையும் உருவாக்கியதில் சு.தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நமது சூழலியல் நெருக்கடிகள் தொடர் பாக அவர் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகள் அவை குறித்த அக்கறைகளை பெரிதும் பரவலாக்கி வந்திருக்கின்றன. வன உயிர்கள், அபூர்வ உயிரினங்களின் அழிவு, வனங்கள் மறைந்து போதல், நீர் நிலைகள் மாசுபடுத்தப்படுவது, இயற்கைக்கு எதிராக மனிதர்கள் தொடர்ந்து உருவாக்கும் வாழ்க்கைமுறை என மிக விரிவான தளத்தில் இக்கட்டுரைகள் பேசுகின்றன. தியடோர் பாஸ்கரனின் எழுத்துக்களில் வெளிப்படும் சுயமான பார்வைகளும் அசலான அனுபவங்களும் பெரும் நம்பகத் தன்மையை உருவாக்குவது மட்டுமல்ல, அவை வாசகனின் இதயத்தை நெருங்கித் தொடுகின்றன. இது துறை சார்ந்த எழுத்துகளில் மிக அபூர்வமாக வெளிப்படும் ஓர் இயல்பாகும். இது அவரது சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகளின் இரண்டாவது தொகுதி. ரூ.100/-

சோலை எனும் வாழிடம்

சு. தியடோர் பாஸ்கரன் தமிழில் சூழியல் சார்ந்த அசலான கருத்துருவாக்கங்களைத் தொடர்ந்து முன்வைப்பவை சு.தியடோர்பாஸ்கரனின் எழுத்துக்கள். நாம் வாழும் பூமியின் அற்புதங்களையும் அவற்றின் மேல் செலுத்தப்படும் வன்முறையையும் அவர் இந்த நூலிலும் வெகுநுட்பமாகக் கவனப்படுத்துகிறார். வாழிடம், காட்டுயிர் சார்ந்தும் சுற்றுச்சூழல் சார்ந்த கோட்பாட்டுப் பிரச்சினைகளை முன்வைத்தும் இந்த நூல் மிக ஆழமான விவாதங்களை உருவாக்குகிறது. நேரடி அனுபவங்களிலிருந்தும்ஆழமான வாசிப்பிலிருந்தும் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சூழியல் சார்ந்த எழுத்து முறைமைக்கு மற்றொரு சிறந்த பங்களிப்பு. ரூ.110/-