எஸ். ராமகிருஷ்ணன் கடலோடியின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல்வரையான இந்த சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத ஒரு கதைப்பரப்பை, சொல்மொழியை உருவாக்குகின்றன. ஆணும்பெண்ணும் ஒரே கூரையின்கீழ் வாழ்ந்தபோதும் எவ்வளவு இடைவெளியும், புதிர்மையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. கதைகளின் வழியாக வெளிப்படும் குரல் நகர வாழ்வின் அபத்தத்தையும், வெளிவேஷத்தையும், அர்த்தமற்ற தினசரிவாழ்வின் பசப்புகளையும் கேலி செய்கின்றது. அந்தக் கேலி நம்மைச் சிரிக்க செய்யும் அதே நேரத்தில் குற்றவுணர்வு கொள்ளவும், நிம்மதியற்றுப் போகவும் செய்கிறது என்பதே இக்கதைகளின் தனிச்சிறப்பு. ரூ.120/- Tags: உயிர்மை, எஸ்.ராமகிருஷ்ணன், சிறுகதைகள்
No Comments