ச. தமிழ்ச் செல்வன் அரசியல் என்றால் என்ன?அதை ஏன் பலரும் சாக்கடை என்று சொல்கிறார்கள்?அரசியலின் வரலாறு என்ன?அரசு என்பதன் பொருள் என்ன?இப்படியான எளிய கேள்விகளோடு துவங்கும் புத்தகம் அரசு என்னும் அடக்குமுறைக்கருவி மனித குல வரலாற்றில் தோன்றிய கதையிலிருந்து இடதுசாரி என்றால் என்ன?வலது சாரி என்றால் என்ன போன்ற கேள்விகளுக்கு விவாத பாணியில் விளக்கம் சொல்கிறது.விதவிதமான ஆட்சி முறைகள் பற்றிப் பேசி ஜனநாயகம் என்பதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவ அரசியலை சமகால கட்சி அரசியலோடு இணைத்து விளக்குகிறது.அரசியல் பற்றி சமீபத்தில் வந்துள்ள இந்த எளிய புத்தகத்தில் கலாச்சார அரசியல் பற்றியும் முதலாளித்துவத்தை ஆவேசமாக எதிர்க்கும் பாட்டாளி வர்க்கம் கருத்து ரீதியாக அதே முதலாளித்துவத்தின் கலாச்சார நிறுவனங்களிடமே மாட்டிக்கொண்டிருக்கும் யதார்த்-தம் பற்றியும் அதற்கெதிராக பாட்டாளி வர்க்கம் நடத்த வேண்டிய கலாச்சார அரசியல் பற்றியும் பேசுகிறது. ரூ.20/- Tags: உயிர்மை, ச. தமிழ்ச் செல்வன், பாரதி புத்தகாலயம்
No Comments