சி.ராமலிங்கம் ஆகாயம் என்பது நம் அனைவருக்கும் பிரமிட்பூட்டும் ஒன்று.ஆதி மனிதனிலிருந்து இன்றைக்கு வாழ்ந்துவரும் நவநாகரீக மனிதர்கள் வரைக்கும் ஆகாயத்தை உற்று நோக்காதவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.வான் பொருள்களாகிய சந்திரன்,சூரியன்,நட்சத்திரங்கள் என்று அனைத்தையும் அந்த காலந்தொட்டே தொடர்ந்து கூர்ந்து நோக்கி வந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.அவர்கள் பூமிக்கும வானத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் நம்பி வந்தார்கள்.உலக வரலாற்றில் ஆதிகாலந்தொட்டு வானவியல் அறிவு நன்றாக இருந்ததற்கான சான்றுகள் பழங்கால கல்வெட்டுகள்,நூல்கள்,கட்டுமானங்கள் போன்ற பல்வேறு வகைகளில் நமக்குத் தெரிய வருகின்றன.இந்த ஆகாயச் சுரங்கம் என்ற நூல் வானத்தில் நிலைபெற்ற அனைத்து வான் பொருள்களைப் பற்றியும் விளக்கிக் கூறும் நூலல்ல.அவைகள் அனைத்தும் இந்த ஒரு நூலில் சொல்லிவிடவும் முடியாது.இந்த நூலைப் படிப்போருக்கு ஆகாயம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகமில்லை.மக்களுக்கு அறிவியலை கொண்டு செல்லும் வகையில் இம்மாதிரி வானவியல் சம்மந்தப்பட்ட நூல்கள் பல வெளிவந்திருக்கின்றன.அந்த நூல்கள் வரிசையில் ஆகாயச் சுரங்கமும் ஒன்று.இது படிப்போரின் கவனத்தை ஈர்க்குமென்றே நம்புகிறோம். ரூ.100/- Tags: அறிவியல், சி.ராமலிங்கம், பாரதி புத்தகாலயம்
No Comments