ஜெயமோகன் தமிழிலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன? என்னுடைய இளம் வாசக நண்பர் ஒருவரிடமிருந்து வந்த வினா இது. தமிழிலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன? அவருக்கு விளக்கும் முகமாக எனக்கு நானே அதை வரையறை செய்யவும் இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் அது எவ்வண்ணம் செயல்படுகிறதென நோக்கவும் முயன்றேன். அவருக்கு எழுதிய கடிதங்களை மீண்டும் கட்டுரையாக எழுதினேன். இது அது. ஆன்மீகம் குறித்த எந்த ஒரு விவாதத்தைப் போலவே இதுவும் வாசகன் தன் பதில்களைத் தானே தேடிச் செல்லும் பயணத்துக்கு உதவக்கூடிய கூடுதல் வினாக்களை எழுப்பவும், எழுப்பப்பட்ட வினாக்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும் மட்டுமே உதவும் என்று எண்ணுகிறேன். பதில்களை முன்வைப்பது அல்ல இதன் நோக்கம்; சில திறப்புகளை உருவாக்க முயல்வதே. அது நிகழுமென எண்ணுகிறேன். ரூ.60/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ஜெயமோகன்
No Comments