சுகுமாரன் இந்தத் தொகுதியிலுள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை இலக்கியம் சார்ந்தவை. குறிப்பாகக் கவிதை பற்றியவை. தமிழ் நவீன கவிதையில் என்ன நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த அணுகலைக் கொண்டவை. அதன் விரிவாக்கமாகவே பிற இலக்கிய வடிவங்களைப் பற்றிய நோக்கும் அமைந்திருக்கிறது தனிக்கட்டுரைகள், நூல் அறிமுகங்கள், மதிப்புரைகள், அனுபவப் பதிவுகள், குறிப்புகள் என்று வெவ்வேறு வடிவங்களில் இவை எழுதப்பட்டிருந்தாலும் இவற்றுக்கிடையில் ஒரு பொதுத்தன்மை இழையோடுகிறது. ஓர் இலக்கிய ஆர்வலன் தன்னைப் பாதித்த நிகழ்வுகளுடன் மேற்கொண்ட எதிர்வினை இவை. இலக்கிய அனுபவத்தின் மூலம் வாழ்க்கையின் வடிவத்தைத் தொட்டு உணர முடியுமா என்று பார்க்கும் பேராசைதான் இக்கட்டுரைகளின் அடிப்படை. ரூ.100/- Tags: உயிர்மை, கட்டுரைகள், சுகுமாரன்
No Comments