செழியன் ‘மரணத்துள் வாழ்வோம்’ கவிதைத் தொகுப்பின் மூலம் கவிஞராக அடையாளப்படுத்தப்பட்டவர். தேசிய விடுதலைப் போராட்ட இலக்கியத்தில் முன்னோடியானவையாக அமைந்த கவிதைகளில் செழியனின் கவிதைகளும் அடங்கும். இதுவரை இவரது ஐந்து சிறுகவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அரசியல் முக்கியத்துவம் பெற்ற ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவருடைய நான்கு நாடகங்கள் டொரன்டோ, கனடாவிலும், ‘வேருக்குள் பெய்யும் மழை’ இலண்டனிலும் மேடை ஏற்றப்பட்டுள்ளன. மனித வாழ்வின், மனித உறவுகளின் சிறு சிறு கணங்கள்கூட காவிய வலிமை பெற்ற உயர்பெரும் பொழுதுகளாக மாற்றம் பெறுகின்ற அற்புத உலகமாக நாடகங்கள் அமைய முடியும். இத்தகைய புரிந்துணர்வும் புலப்பதிவும் ஒருங்கே அமையப் பெற்றவர் செழியன். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து டொரன்டோ கனடாவில் வாழ்கின்ற செழியனின் படைப்புகளுக்குப் புலம்பெயர்ந்த வாழ்வு புதிய வண்ணங்களை வழங்கியிருக்கிறது. புதிதாக இவர் ‘வானத்தைப் பிளந்த கதை’ என்கின்ற அனுபவத் தொடரை எழுத ஆரம்பித்துள்ளார். ரூ.50/- Tags: உயிர்மை, செழியன், நாடகங்கள்
No Comments