யமுனா ராஜேந்திரன் எனது கவிதைகள் அவிழும் பிரபஞ்சம் எனது உடல்தான். என்னளவில் எழுதுவது என்பது அடிப்படையில் உடல்சார்ந்த இயக்கம்தான். நான் எப்போதும் சொல்வதுண்டு, நான் எனது விரல் நகங்களால்தான் எழுதுகிறேன். எனது சருமத்தின் மீது எனது உடலில் எழுதுகிறேன். உடலின் மேற்பரப்பை நான் உறித்தெடுக்க விரும்புகிறேன். அதற்காக எனது உடம்பையும் எனது நகங்களையும் நான் உபயோகிக்கிறேன். இவைகளே எனது கருவிகள். சிருங்காரமே வாழ்வின் நாடித்துடிப்பு, மரணத்துடன் சிருங்காரம் நெருக்கமாக உறவுகொண்டிருக்கிறது என்றபோதும, நான் வாழ்கிறேன் என்பதற்கான உணர்வை இதுவே எனக்குத் தருகிறது. ஜோமனா ஹித்தாத் ரூ.70/- Tags: உயிர்மை, மொழிபெயர்ப்பு, யமுனா ராஜேந்திரன்
No Comments