முனியப்ப ராஜ் முனியப்பராஜ் உற்சாகத்துடன் எழுதத் துவங்கியிருக்கும் கவிஞர்களில் ஒருவர். நவீனத் தமிழ்க் கவிதை மரபில் திட்டவட்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் வடிவ நேர்த்தி இவர் கவிதைகளில் இயல்பாக அமைந்திருக்கிறது. கவிஞர் தன்னுடைய யோசனைகளைத் தெளிவாகக் குழப்பங்களுக்கு இடமில்லாத வகையில் முன்வைக்கிறார். கவிதைகளின் ஆரம்பம், முடிவு குறித்த திட்டவட்டமான யோசனைகளும் வரையறைகளும் முனியப்பராஜுவுக்கு இருக்கிறது. கடந்து வந்த உலகம், எதிர்கொள்ளும் உலகம், தன்னால் புரிந்து கொள்ள முடியாத உலகம் என முனியப்பராஜின் இருப்பு இக்கவிதைகளில் இடம்பெறுகிறது. ரூ.40/- Tags: உயிர்மை, கவிதைகள், முனியப்ப ராஜ்
No Comments