வா.மு. கோமு வா.மு. கோமுவின் எழுத்துகள் குதூக்கலமும் துணிச்சலும் கொண்ட மொழியால் வாழ்வை எதிர்க்கொள்பவை. அவரது முதல் நாவலான கள்ளியில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வும் மதிப்பீடு களும் கனவுகளும் வெகு இயல்பாகத் தோற்றம் கொள்கின்றன. மத்திய தரக் கலாச்சார மதிப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து, தமிழ் வாழ்வின் அறியப்படாத எதார்த்தம் ஒன்றினை வா.மு.கோமு சித்தரிக்கிறார். இந்த எதார்த்தம் சில நேரம் அதிர்ச்சி அளிப்பது; சில நேரம் நம் அந்தரங்க முகத்தைத் திறந்து காட்டுவது; ஒருபோதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது. ரூ.120/- Tags: உயிர்மை, நாவல்கள், வா.மு.கோமு
No Comments