‘கணையாழி’ பத்திரிகையோடு அதன் தொடக்க இதழிலிருந்து 1988வரை நான் தொடர்புகொண்டிருந்த 23 ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரை மற்றும் குறிப்புகளில் என் கைவசமிருந்தவற்றின் தொகுப்பு ‘காலக்கண்ணாடி.’ ஒரு பத்திரிகை அது இயங்கும் சமூகத்தின் சமகால நடப்புகளின் இயக்கத்தையும் விளைவுகளையும் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டவை இவை. இத்தொகுப்பில் சில இடங்களில் காணப்படும் ஒரு&வரி அறிவிப்புகள், சில பிரசுரங்களின் முகவரி மற்றும் விலை பற்றிய விவரங்கள் அந்தந்த காலகட்டத்தைத் தகவல்பூர்வமாக விளக்கக்கூடும் எனச் சேர்க்கப்பட்டவை. என் சிறுகதை, நாவல் முதலியனவும் இத்தகைய முயற்சிகள்தான். என் வரையில் எல்லாமே நான் எழுதிவரும் முடிவுறாத ஒரு நீண்ட படைப்பின் பகுதிகளாகவே தோன்றுகின்றன. – அசோகமித்திரன் ரூ.220/- Tags: அசோகமித்திரன், கட்டுரைகள், நற்றிணை
No Comments