ஜெயமோகன் நாம் எப்போதும் அரசியலைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம், ஓயாமல் விவாதிக்கிறோம். ஏனென்றால் அது நம்முடைய நிகழ்காலத்தின், எதிர்காலத்தின் மீதான விவாதம். இந்த விவாதங்களில் எத்தனையோ தரப்புகள் உண்டு. கட்சித்தரப்புகள். கோட்பாட்டின் தரப்புகள். அவற்றில் ஒன்று எழுத்தாளனின் தரப்பு. எழுத்தாளனின் தரப்பு என்பது கட்சி மற்றும் கோட்பாடுகளைச் சார்ந்ததாக இருக்க முடியாது. எந்த நுண்ணுணர்வால் அவன் இலக்கியங்களைப் படைக்கிறானோ அந்த நுண்ணுணர்வால் அவன் சமகால அரசியலை அணுகும்போது உருவாகும் கருத்துக்களால் ஆனது அது. ஒரு நாவலை எழுதும் அதே ஆராய்ச்சியுடன் முழுமை நோக்குடன் அவன் வரலாற்றையும் அரசியலையும் பார்ப்பான் என்றால் அவன் குரலை எவரும் புறக்கணித்துவிட முடியாது சமகால அரசியல் குறித்த எண்ணங்களும் எதிர்வினைகளும் பதிவுகளும் கொண்ட நூல் இது ரூ.160/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ஜெயமோகன்
No Comments