வா.மு. கோமு பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்தப் புதிய நாவல். ஆபாசமென்றும், மிகை என்றும் சொல்லக்கூடாதவை என்றும் சொல்லப்பட்டவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை மிகவும் நெருங்கி வருகிறார் வா.மு.கோமு. நம்முடைய ஆசாபாசங்களும் இரகசிய விருப்பங்களும் நம்மை எந்த அளவுக்கு இன்பமூட்டுமோ அந்த அளவுக்கு இந்த நாவலும் இன்பமூட்டுகிறது. எந்த அளவுக்கு அது நம்மை பயப்படவைக்குமோ அதே அளவுக்கு பயப்படவும் வைக்கிறது. நகரங்கள், கிராமங்கள், சமூக, பொருளாதார வித்தியாசங்கள் என சகலத்தையும் கடந்து இன்று உருவாகும் ஒரு பொதுப்பண்பாடு எவ்வாறு எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைகிறது என்பதை மிகத் துல்லியமான மொழியில் இந்த நாவல் சித்தரிக்கிறது. ரூ.240/- Tags: உயிர்மை, நாவல்கள், வா.மு.கோமு
No Comments