ஜெயமோகன்
கிறித்தவத்தை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகழித்து ரோமப்பேரரசர் கான்ஸ்தன்தீன் அவர்களால் கூட்டப்பட்ட சபைகள் மூலம் திட்டவட்டமாக ஒருங்கமைக்கப்பட்ட கிறிஸ்தவம் ஒன்று. இன்றுள்ள எல்லாத் திருச்சபைகளும் அந்த அமைப்பில் இருந்து முளைத்து வந்தவையே. அவை கிறிஸ்துவை ஒரு இறைமகனாக மட்டுமே முன்வைக்கின்றன. அவர் விண்ணுலகுக்கு வழிகாட்டவந்தவர் என்று சொல்கின்றன. அவர் மட்டுமே ஒரே மீட்பர் என்று சொல்லி மத ஆதிக்கத்தை உலகமெங்கும் கொண்டுசென்று பரப்ப முயல்கின்றன இன்னொரு கிறிஸ்தவம் உண்டு. அது ஞானவாத கிறித்தவம் எனப்படுகிறது. கிறிஸ்துவை ஒரு மாபெரும் ஞானகுருவாகக் கருதுவது அது. அவர் சொன்ன இறையுலகம் இந்த மண்ணிலேயே உருவாக்கப்படவேண்டியது என்று நம்புவது. கிபி மூன்றாம் நூற்றாண்டுமுதல் ஐந்தாம் நூற்றாண்டுவரையிலான மத ஆதிக்க காலகட்டத்தில் ஞானவாத கிறிஸ்தவத்தின் நூல்கள் அனேகமாக எல்லாமே வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டன. ஞானவாதிகள் கொன்றே ஒழிக்கப்பட்டார்கள். ஆனால் வரலாறு அவற்றில் சில நூல்களின் சில பக்கங்களை விட்டு வைத்தது. பைபிளில் இருந்து விலக்கப்பட்ட புனித தாமஸ் எழுதிய நற்செய்தி, மேரி மக்தலீன் எழுதிய நற்செய்தி போன்ற பல நூல்கள் பாப்பிரஸ் சுவடிகளாக கிடைத்தன. இவை கிபி இரண்டாம்நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நூல் அந்த ஞானவாத கிறித்தவ மரபின் வழியாக கிறிஸ்து என்ற மகத்தான மெய்ஞானகுருவை உள்வாங்கிக்கொள்ளும் முயற்சி.
ரூ.120/-
No Comments