சுஜாதா சுஜாதாவின் படைப்புகளை தேர்ந்தெடுத்த தொகை நூல்களாக வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம் ஏற்கனவே அவருடைய குறுநாவல்களை இரண்டு தொகுதிகளாக கடந்த ஆண்டு பதிப்பித்தது. அந்த வரிசையில் அவரது குறுநாவல்களின் மூன்றாவது தொகுதி இது. இந்தத் தொகுதியில் கணேஷ் – வசந்த் இடம்பெறும் குறுநாவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழில் துப்பறியும் கதைகள் அல்லது குற்றம் சார்ந்த கதைகளின் இயல்பில் பெரும் மாறுதல்களைக் கொண்டுவந்தவர் சுஜாதா. குற்றங்களின் உளவியல் ரீதியான பின்புலங்கள் தர்க்க ரீதியான, அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த அணுகுமுறை ஆகியவை அவரது துப்பறியும் கதைகளை தனித்துவம் உள்ளதாக்குகின்றன. அந்தக் குற்றக்கதைகளில் இடம் பெறும் துல்லியமான பின்புலம் சார்ந்த விவரணைகளும் பாத்திர உருவாக்கமும் சம்பவங்களின் யூகிக்க முடியாத நூதனமான திருப்பங்களும் இந்தக் கதைகளை மர்மக்கதைகள் என்கிற எல்லையைத் தாண்டி முக்கியத்துவம் பெறச்செய்கின்றன. ரூ.500/- Tags: உயிர்மை, குறுநாவல், சுஜாதா
No Comments