ஜெயமோகன் ஒரு எழுத்தாளனின் பணி அனுபவங்களை தொகுப்பது மட்டுமல்ல. கருத்தாக்கங்களை உருவாக்குவதன் மூலமும் உரையாடலுக்கான கேள்விகளை தொடர்ந்து எழுப்புவதன் மூலமும் அவன் தனது சூழலை உயிர்ப்புடன் இயங்கச் செய்கிறான். அவன் தற்செயலாக, போகிற போக்கில் எழுப்புகிற கேள்விகள் மீண்டும் மீண்டும் பலராலும் பதில் சொல்லப்பட்டு நிரந்தரம் பெற்று விடுகின்றன. அந்த வகையில் ஜெயமோகன் தனது பேச்சுகளின் ஊடாக முன்வைத்த பல கருத்துகள் கடந்த இருபதாண்டுகளில் நவீன தமிழ் இலக்கிய சூழலின் தொடர்ச்சியான பேசுபொருளாக இருந்திருக்கின்றன. கடும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் உருவாக்கி இருக்கின்றன. சில சமயம் அவை தர்க்கத்தின் பாற்பட்டவை. சில சமயம் காழ்ப்பின் வழி நிற்பவை. இந்தத் தொகுதியில் ஜெயமோகன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள் இடம்பெறுகின்றன. அவை பல்வேறு கலை இலக்கிய, சமூக பிரச்சினைகளை தீவிரமாக விவாதிக்கின்றன. ரூ.110/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ஜெயமோகன்
No Comments