யாழன் ஆதி தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும் தம்மபதம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் பல மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் கவிதை வடிவத்தில் தம்மபதம் மிக எளிமையாகவும் வாசிப்போருக்கு இன்பம் பயப்பதாகவும் அமைந்திருப்பது இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பு எனக் கூறலாம். ரூ.130/- Tags: எதிர் வெளியீடு, கவிதைகள், யாழன் ஆதி
No Comments