ஜெயமோகன் அனுபவங்களின் நிறங்கள் பிரியும் மகத்தான காட்சிகளை தொடர்ந்து உருவாக்குவதன் வாயிலாக ஒரு எழுத்தாளன் வாழ்வை விவரணை செய்ய முற்படுவதில்லை. மாறாக அறிய முடியாதெனெ விதிக்கபட்ட அதன் ரகசிய தருணங்களை நெருங்கிச் செல்ல இடையறாது விழைகிறான். அவ்வாறு நெருங்கிச் செல்லும்போது அந்த ரகசியம் இன்னும் பன்மடங்காக பல்கிப் பெருகிவிடுகிறதேயன்றி அவிழ்க்கப்படுவது இல்லை. அந்த வகையில் ரகசியங்களின், வாழ்வின் நுண்ணிய தருணங்களின் உற்பத்தியாளனாக ஒரு படைப்பாளி மாறிவிடுகிறான். ஜெயமோகனின் இந்த அனுபவக் கட்டுரைகள் ஆழ்ந்த விம்முதலை உருவாக்குபவை. நாம் புரிந்துகொள்ளாமல் கடந்துவந்துவிட்ட நமது நிழல்களை பேச வைப்பவை. மனிதர்களுக்குள் இடையறாது பெருகும் உணர்ச்சிகளின் நதியிருந்து ஒரு பொதுமையை கண்டடைபவை. ரூ.150/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ஜெயமோகன்
No Comments