சுகுமாரன் ஆழ்கடலின் கடும் குளிரை சின்ன நீர்த்துளிக்குள் செறிவாக்கி வைக்க முயற்சிப்பவை சுகுமாரனின் கவிதைகள். மூர்க்கத்தில் திமிரும் சொற்களின் மீது பிரக்ஞையின் கடிவாளத்தை இரக்கமின்றிப் பிரயோகிப்பவை. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் வாழ்வின் வினோதமும் வசீகரமும் கொண்ட கணங்களை இதமும் கனிவும் கூடிய வாக்கியங்களால் எழுதிச் செல்கின்றன. அவர் நம் அந்தரங்கத்திற்கு எவ்வளவு அருகில் வரமுடியுமோ வந்து உரையாடலின் மகத்துவம் மிக்க தருணங்களைத் திறககிறார். ரூ.70/- Tags: உயிர்மை, கவிதைகள், சுகுமாரன்
No Comments