சி.ராமலிங்கம் இன்றைய உலகம் அறிவியலின் கைக்குள் அடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.அறிவியலை புறந்தள்ளி மனித வாழ்க்கையை இன்று கற்பணை செய்துகூடப் பார்க்க முடியாது.அப்படிப் பார்த்தால் அந்த வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும்.தனி மனித வாழ்க்கையானாலும் குழு அல்லது சமூக வாழ்க்கையானலும நாம் வழ்வது அறிவியலார்ந்த வாழ்க்கையே.இப்படி அறிவியல்மனித வாழ்க்கையில் இரண்டறக் கலப்பதற்கு எண்ணற்ற அறிவியலாளர்களின் அயராத உழைப்பும்,கண்டுபிடிப்புகளும்தான்.எல்லா காலக்கட்டங்களிலும் அறிவியல் மனித வாழ்க்கைக்கு நெம்புகோலாக இருந்திருக்கிறது.ஆனால் மதம் பல கண்டுபிடிப்புகளையும்,கண்டு பிடிப்பாளர்களையும் தன் கோரப் பற்களால் கடித்துக் குதறியிருக்கிறது.கொன்றும் தீர்த்திருக்கிறது.இன்றுவரை இந்த நிலை நீடித்துக் கொண்டிருக்கையில்,பல கண்டு பிடிப்புகளை மதங்கள் சுவீகரித்துக் கொண்டிருக்கின்றன.இன்றைக்கு நம் கண் முன்னே அளப்பரிய சக்தியாய் எழுந்து நிற்கும் அறிவியலை நாம் உணர்வது முக்கியம்.அதோடு நிற்காமல் அறிவியல் கண்ணோட்டம்,அறிவியல் பார்வையை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல போதுமான அறிவியல் இலக்கியங்கள் இல்லை.இதனை போதுமான அளவிற்கு வளர்த்தெடுப்பது நம் அனைவரின் கடமை.மற்ற இலக்கியங்கள் பழங்காலந்தொட்டு தொடர்கின்ற நிலையில் அறிவியல் இலக்கியம் தனக்குரிய இடத்தை இன்னும் நிரப்பிக்கொள்ளவில்லை என்றே கருதலாம்.இதன் முயற்சியாக இந்நூலைச் சொல்லலாம். ரூ.150/- Tags: அறிவியல், சி.ராமலிங்கம், பாரதி புத்தகாலயம்
No Comments