காஞ்சனா தாமோதரன் தமிழ்வாசகர்களால் ஒரு கதாசிரியராக அறியப்பட்ட காஞ்சனா தாமோதரன், பல தமிழ் இதழ்களிலும், இணைய தளங்களிலும் அவ்வப்போது வெளியான தனது கட்டுரைகளை இப்புத்தகத்தில் தொகுத்தளிக்கின்றார். இவை பரவலான வாசிப்பிற்காக எழுதப்பட்டவை என்கிறார் நூலாசிரியர். கட்டுரைகளின் வெளியும் அகன்று இருக்கின்றது. இலக்கிய விமர்சனங்கள், சமூகக் கரிசனங்கள், சுற்றுச்சூழல் பற்றிய அக்கறைகள், இராக் போர், ஐரோப்பிய கலை வரலாறு என ஆசிரியரின் வீச்சு பரந்திருக்கின்றது. (சு. தியடோர் பாஸ்கரன்) ரூ.125/- Tags: உயிர்மை, கட்டுரைகள், காஞ்சனா தாமோதரன்
No Comments