எஸ். ராமகிருஷ்ணன் நவீன மனிதகுல வரலாறு புலம்யெர்வுகளின் வரலாறாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அறிவியலும் தொழில் நுட்பமும் காலம், இடம் சார்ந்த இடைவெளிகளை அழித்துவரும் அதே சமயம் அரசியல், சமூக, பொருளியல் காரணிகளால் மனிதர்கள் இடம் பெயர்வதும் பல்வேறு கலாச்சாரக் குழப்பங்களுக்கு ஆளாவதும் கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் பெரும் மனித அனுபவமாக மாறிவிட்டது. கலைகளும் இலக்கியங்களும் இந்த அனுபவத்தைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. மனிதர்களின் அலைந்துழலும் வாழ்வின் ரகசியங்களைச் சொல்லும் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள் சிதறுண்டுபோன நவீன மனித வாழ்க்கை குறித்த காட்சிகளை முன்வைக்கின்றன. இக்கதைகள் வாசிப்போம் சிங்கப்பூர் இயக்கத்திற்காக பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டவை. ரூ.50/- Tags: உயிர்மை, எஸ்.ராமகிருஷ்ணன், சிறுகதைகள்
No Comments