எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்கள், கேள்வி-பதில்கள் என்பது எழுத்திற்கு அப்பால் எழுத்தாளனின் ஆளுமையை அடையாளம் காட்டும் முயற்சிகள். சொந்த வாழ்க்கை அன்றாட அனுபவங்களை, படித்த, கேட்ட, பார்த்த நிகழ்வுகளை சமூகம் குறித்த உரத்த சிந்தனைகளை, சமகால இலக்கியப் போக்குகளைப் புனைவின் நிழல்படாமல் பேசி அறிந்து கொள்ளும் ஒரு சவாலே நேர்காணல்கள். இது எஸ்.ராமகிருஷ்ணன் சமீபத்தில் அளித்த நேர்காணல்களின் தொகைநூல். முன்னதாக, எப்போதுமிருக்கும் கதை என்ற அவரது நேர்காணல்களின் இரண்டாவது தொகுப்பு நூல். பேச்சிற்கும் எழுத்திற்கும் இடைவெளியற்றவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்பதையே இந்த நேர்காணல்கள் அடையாளம் காட்டுகின்றன. ரூ.130/- Tags: உயிர்மை, எஸ்.ராமகிருஷ்ணன், நேர்காணல்கள்
No Comments