சாரு நிவேதிதா சாரு நிவேதிதா எழுதிய சிறுகதைகளின் முழுத் தொகுதி இது. தமிழில் புதிய புனைவு மொழியை பரீட்சித்துப் பார்த்தவர்களில் சாருவின் இடம் மிகவும் முக்கியமானது. அவற்றில் பல கதைகள் வெளிவந்த காலத்தில் அதிர்ச்சிகளையும் விவாதங்களையும் உருவாக்கின. லீனியர், நான் லீனியர், எதார்த்தம், புனைவுகள் எனப் பல்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் இக்கதைகள் நவீனச் சிறுகதை மொழிக்குப் புது ரத்தம் பாய்ச்சுபவை. இக்கதைகளின்மீது ‘அதிகாரபூர்வமான’ இலக்கிய மதிப்பீட்டாளர்கள் பாராட்டிய மௌனமும் காட்டிய கோபமும் இக்கதைகளின் எதிர்த் தன்மைக்குக் கிடைத்த அங்கீகாரமே. பழக்கப்பட்ட கதையின் பாதைகளைப் புறக்கணித்து மொழியின் அபாயகரமான பாதைகளில் பயணிக்கின்றன இக்கதைகள். ரூ.190/- Tags: உயிர்மை, சாரு நிவேதிதா, சிறுகதைகள்
No Comments