ஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகள் காலவெளியில் தன்போக்கில் நிகழும் மாற்றங்களில் கவனம் கொள்பவை. இவரது கூர்ந்த அவதானிப்பு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. நேருக்கு நேர் பேசுவது போலவே பெரும்பாலான கவிதைகளில் மொழிகிறார். இதனால் ஓர் இயல்பான நெகிழ்வும் சரளமும் கவிதை மொழியில் கூடிவிடுகிறது. நேரடி கூறல், குறியீடுகள், புனைவுகள், கதைகள் இப்படியாகக் கவிதைகளை உருவாக்குகிறார். நவீன கவிதை மீதான நம்பிக்கைக்கு வலுவூட்டும் கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. – ஷங்கர்ராமசுப்ரமணியன் ரூ.50/- Tags: கவிதைகள், நற்றிணை, ஷங்கர்ராமசுப்ரமணியன்
No Comments