ச. தமிழ்ச் செல்வன் இந்தியா இரண்டு நாடுகளாக இந்தியா,பாகிஸ்தான் என ஆன கதையை மனம் அதிரும் ஆதாரங்களுடன் பேட்டிகளுடன் உண்மைச் சம்பவங்களுடன் விளக்கிச் சொல்லும் புத்தகம்.பிரிவினையின் போது லட்சோப லட்ச மக்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்தும் இங்குமாக இடம்பெயர்ததனர்.மனித குல வரலாற்றில் மிக அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயரிந்து1947-இந்தியாவிழி தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள்.அகதிகளானது மட்டுமல்ல துயரம்.மதப் பகைமை மூட்டி வளர்க்கப்ப்ட்டதன் விளைவாக இருபக்கமும் படுகொலைகள் நடந்தன.பல்லாயிரக்கணுக்கானபெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளநாதன் காரணமாக கருவுற்றனர்.கருசிதைவு செய்து கொள்வதற்காக மருத்துவமனை வளாகங்களில்வரிசையில் நின்ற பெண்கள் ஆயிரமாயிரம்.வழியில் தொலைந்து போன பெற்றோர்களை தேடும் பிள்ளைகளும் பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோரும் இரு நாட்டு எல்லைகளிலும் நின்று மகனே,என்றும் மகளே,என்றும் அம்மா,என்றும் அப்பா,என்றும் கதறும் ஒலிகள் காலங்கள் தாண்டியும் வந்து கொண்டிருக்கும் அவலத்தைப் பதிவு செய்துள்ள உணர்ச்சிக்ரமான புத்தகம். ரூ.20/- Tags: அரசியல், ச. தமிழ்ச் செல்வன், பாரதி புத்தகாலயம்
No Comments