மண் பூதம்

வா.மு. கோமு வா.மு.கோமு தன்னுடைய வித்தியாசமான, துணிச்சலான சிறுகதை மற்றும் கவிதை முயற்சிகளுக்காகப் பெரிதும் கவனம் பெற்று வருபவர். கலாச்சாரரீதியான மனத் தடைகளை, மொழியின் குதூகலமும் அங்கதமும் கொண்ட இவரது மொழி வெகு இயல்பாகத் தாண்டிச் சென்றுவிடுகிறது. எதார்த்த உலகின் அழுத்தமான காட்சிப்படுத்தல்கள் சட்டென அதீதப் புனைவுகளுக்குள் கரைந்து ஒரு புதிய அனுபவத்தை இக்கதைகள் உருவாக்குகின்றன. ரூ.90/-

சேகுவேரா வந்திருந்தார்

வா.மு. கோமு யாரும் பேசத் தயங்கும் உண்மைகளை, யாரும் சொல்லக் கூசும் ரகசியங்களை நேருக்கு நேர் பாசாங்கில்லாமல் முன்வைப்பவை வாமு.கோமுவின் கதைகள். வாழ்வின் அபத்த நிலைகள்மீது பரிகாசமும் சுய எள்ளலும் கொண்ட அவரது புனைவுலகம் தமிழ்வாழ்வின் அறியப்படாத புதிய பரப்புகளை அறியச் செய்கிறது. இத்தொகுப்பில் உள்ள கதைகள் அவரது படைப்பு மொழியின் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டுகின்றன. ரூ.180/-

கள்ளி

வா.மு. கோமு வா.மு. கோமுவின் எழுத்துகள் குதூக்கலமும் துணிச்சலும் கொண்ட மொழியால் வாழ்வை எதிர்க்கொள்பவை. அவரது முதல் நாவலான கள்ளியில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வும் மதிப்பீடு களும் கனவுகளும் வெகு இயல்பாகத் தோற்றம் கொள்கின்றன. மத்திய தரக் கலாச்சார மதிப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து, தமிழ் வாழ்வின் அறியப்படாத எதார்த்தம் ஒன்றினை வா.மு.கோமு சித்தரிக்கிறார். இந்த எதார்த்தம் சில நேரம் அதிர்ச்சி அளிப்பது; சில நேரம் நம் அந்தரங்க முகத்தைத் திறந்து காட்டுவது; ஒருபோதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது. ரூ.120/-

சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்

வா.மு. கோமு பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்தப் புதிய நாவல். ஆபாசமென்றும், மிகை என்றும் சொல்லக்கூடாதவை என்றும் சொல்லப்பட்டவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை மிகவும் நெருங்கி வருகிறார் வா.மு.கோமு. நம்முடைய ஆசாபாசங்களும் இரகசிய விருப்பங்களும் நம்மை எந்த அளவுக்கு இன்பமூட்டுமோ அந்த அளவுக்கு இந்த நாவலும் இன்பமூட்டுகிறது. எந்த அளவுக்கு அது நம்மை பயப்படவைக்குமோ அதே அளவுக்கு பயப்படவும் வைக்கிறது. நகரங்கள், கிராமங்கள், சமூக, பொருளாதார வித்தியாசங்கள் என சகலத்தையும் கடந்து இன்று உருவாகும் ஒரு பொதுப்பண்பாடு எவ்வாறு எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைகிறது என்பதை மிகத் துல்லியமான மொழியில் இந்த நாவல் சித்தரிக்கிறது. ரூ.240/-

சயனம்

வா.மு.கோமு பல முகங்களையும், பரிமாணங்களையும் கொண்ட கிராமிய வாழ்வை எவ்வித இட்டுக்கட்டுதலுமின்றி அதன் இயல்பிலேயே சொல்லிக் கடக்கிறார் வா.மு.கோமு. கலாச்சாரப் போர்வையை கிழித்தெறிந்து விட்டு பாலியல் தன் வேட்கையை நிறுவுகிறது. பேராசை, பெரும்பசி என இவைகளே வாழ்க்கையை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. ரூ.250/-

57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்

வா. மு. கோமு வாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம் இல்லை. நம்ம மண் சார்ந்த மனிதர்களைப் பார்த்து, பழகி உள்வாங்குற விஷயம் தான் எழுத்தா வெளிப்படுது. மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களைப் பத்தியும் எழுதுற கதைகள்தான் பேசப்படும். என் கதைகளும் அப்படித்தான்! ரூ.110/-

பிலோமி டீச்சர்

வா.மு.கோமு காதல் என்பதே பாதி வாழ்வு. பாதி சாவுதான், பிலோமி டீச்சர் வாழவும் சாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஒரு சிலுவைப்பாடு, ஒரு புத்துயிர்ப்பு. இருளின் தன்மைதான் காதல். இருள்தான் ஆழ்ந்த அமைதி, சாவு கூட இருள்தான். மரணத்திற்கு என்றுமே கருப்பு நிறம்தான். காதலும் கருப்பு நிறம்தான் இரண்டிற்குமான ஒரே உறவு கருப்புதான். ரூ.180/-

தவளைகள் குதிக்கும் வயிறு

வா.மு.கோமு தொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் துப்புவது மாதிரி துப்பியது சிவப்பு, கருப்பு, பச்சை நிறங்களில் விழுந்து பூரான்கள் காகிதக் குப்பைகளுக்குள் ஓடி ஓடி ஒளிந்தன. குட்டி குட்டி பூரான்கள் துப்பிவிட்டுத் தான் தொப்புள் சுருங்கியது. ரூ.230/-

என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்

வா.மு. கோமு இவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்க வல்லவை. பரந்துபட்ட இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது சிறுகதைகள் சொல்ல முற்படுகின்றன. இன்றைய கொங்கு மக்களின் பேச்சு வழக்காற்றியலை தனக்கே உரிய எளிமையான நடையோடு சொல்லிச் செல்வதில் இவரது கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ரூ.100/-