திபெத் சில புரிதல்கள்.

என்.ராம்,தமிழில்:கி.இலக்குவன் திபெத் பிரச்சனையை சீன எதிர்ப்பு மற்றும் கம்யூனிச எதிர்ப்புக் கண்ணோட்டத்துடன் காணக்கூடிய பல அறிவு ஜீவிகள் மேம்போக்கான முறையில் பல விமர்சனங்களை செய்து வருகின்றனர்.திபெத் பிரச்சனை இன்று திடீரென்று தோன்றியுள்ள பிரச்சனை அல்ல.அதற்கு50ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறும் இன்றைய நிகழ்வுகளையும் பேசுகிறது இந்நூல். ரூ.25/-

விடியலை நோக்கி அருந்ததியர்

பி.சம்பத் இந்தியாவில் கையால் மலம் அள்ளும் பணியில்6.76லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.அவர்களின் சமூக பொருளாதார விடுதலை,உரிமைகள்,கல்வி வேலை வாய்ப்பில் உள் ஒதுக்கீடு இதற்கான மாநாட்டு தீர்மானங்கள் உள் இட ஒதுக்கீட்டு எதிர்ப்புக்கான பதில்கள் தலித் விடுதலையும்,வர்க்கப் போராட்டமே,இழி தொழில் இருந்து விடுதலை பெறுவது,உள் இட ஒதுக்கீட்டுக்கு அனைத்துக் கட்சிகள் ஆதரவு குறித்து இந்நூலில் எளிய தமிழில் கூறப்பட்டுள்ளன. ரூ.15/-

காந்தி புன்னகைக்கிறார்

ஜா.மாதவராஜ் அவனது பரிணாமம் என்பது இருளில் நடந்தது.அவனது பயணத்தின் தடயங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட¢டிருந்தன.சாத்தானின் பிரவேசம் என்பது இப்படித்தன் இருக்கும் போலும்.அவன் பெயர் நாதுராம் கோட்சே!அவரது வாழ்வு என்பது ஒளி நிறைந¢தது.அவர¤டம் எந்த ஒளிவு மறைவும் இல்லை.அவர் எடுத்து வைத¢த ஒவ்வொரு அடியையும் உலகமே அறிந்திருந்தது.அவர்தான் தேசப்பிதா காந்தி மகான்.ஒரு திரைப்படத்தின் இணைக் காட்சி பாணியில் விறுவிறுப்பாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்லப்படும் வரலாறு இப்பக்கங்களில் விரிகிறது.காந்தியும் கோட்சேயும் தனி நபர்கள் அல்லர்.வெவ¢வேறான எதிரெதிரான இரு கருத்துக்களின் தத்துவங்களின் பிரதிநிதிகள்.கோட்சேயைக் கொலைகாரனாக மாற்றிய இந்துத்துவ தத்துவம் இந்திய வரலாற்றில் இயங்கிய வரலாறும் கோட்சே அதன் பிடியில் சிக்கி வளர்ந்த கதையும் ஆதாரங்களுடன் சொல்லப்படுகிறது.மதச் சார்பற்ற அரச¤யலுக்கு வித்திட்ட மகாத்மா இந்துத்துவத்தை எதிர்கொண்ட தருணங்களும் விதமும் கூர்மையாக விளக்கப்பட¢டுள்ள புத்தகம்.காந்தி கொலையுண்ட நிகழ்வும் அதற்கு முன்னர் அவரைக் கொலை செய்ய நடந்த முயற்சிகளும் ஒரு மௌனப்படம் போல நம் முன்னே காட்சிபூர்வமாக நகர்கின்றன.காந்தி கொலைக்குப் பிறகு நாட்டில் நடந்த நிகழ்வுகளும் சமீப காலங்களில் வெறி கொண்டு எழுந்து நிற்கும் இந்துத்வா சக்திகள் கோட்சேயை தியாகியாகக் காட்ட எடுக்கும் முயற்சிகளும் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றன.காந்தி பிறந¢த குஜராத் மண¢ணில் ரத¢த ஆறு ஓடிக்கொண்டே இருக்கிறது.ஆனால்1947ஆகஸ்ட்15அன்று காந்தி நின்ற இடமான கல்கத்தா அமைதிப்-பூங்காவாக மணக்கிறது ஹக்ளி நதி அமைதியாப் பாய்ந்து கொண்டி-ருக்கிறது.இதில் பொதிந்துள்ள உண்மையை அடையாளம் கண்டு காந்தி நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார். ரூ.10

தேசிய மற்றும் காலணிய பிரச்சனைகள் குறித்து

அய்ஜாஸ் அகமது இப்புத்தகத்தின் உள்ளடக்கம் புரியப் புரிய மார்க்சிய மூலவர்களின் சுவாசம் முழுவதிலும் வர்க்க அரசியல் வியாபித்துள்ளதைக் கண்டு பிரமிக்கத்தான் முடிந்தது.தேசியம் ஆனால் என்ன?காலனியப் பிரச்சனைகள் ஆனால் என்ன?எதைத்தான் வர்க்க அரசியலில் இருந்து பிரித்து வைத்துவிட முடியும்?மானுடச் செயல்பாடுகள் அனைத்தும் வர்க்க அரசியல் ஊடாகவே பார்க்கப்பட வேண்டும் என்கிற புரிதல் கிடைத்தது. ரூ.220/-

ஜிகாதி

ஹெச்.ஜி.ரசூல் பக்கிர்ஷாக்களில் தொடங்கும் அவர் பயணம் ஈராக்,அங்கோலா,தென்னாப்பிரிக்கா,காஸா தேசங்களின் சூழலை அலசி,தமிழ்ப் படைப்பாளிகள்,இஸ்லாமிய ஆளுமைகள் என விரிந்து மலாலாவிடம் நிறைவுறுகிறது. ரூ.80/-

மருந்து விலகும் அரசு கொழிக்கும் கார்ப்பரேட்

எஸ்.சுகுமார் மக்களின் நோயைக் காசாக்கும் கார்ப்பரேட் லாபவெறிக்கு ஆதரவும் உற்சாகமும் அளித்து தனது கடமையில் இருந்து விலகும் காங்கிரஸ்,பா.ஜ.க.அரசுகளின் நயவஞ்சகத்தை தோலுரித்து காட்டுகிறது. ரூ.10/-

ஒப்பந்த பணியாளர்கள்

கே.விஜயன் பாட்டாளி வர்க்கத்தின் கடைசிப் படிநிலையாய் செய்யும் வேலைக்கோ உடலுக்கோ உயிருக்கோ எந்தவித பாதுகாப்பும் இல்லாது நவீன முதலாளித்துவத்தின் உச்சபட்ச சுரண்டலில் வாடும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறித்து விளக்குகிறது. ரூ.10/-

இன்சூரன்சில் அந்நிய முதலீடு

க.சுவாமிநாதன் இது ஓர் பொருளாதார சூதாட்டம்.இதில் தார்மீக நெறிகளுக்கு இடம் கிடையாது-எளியவர்களுக்கு எதிரான அரசியலே உண்டு. ரூ.10/-

நந்தவனம்

வெ.மன்னார் “விவேகானந்தர் சூழலியல் அறிவியல் தமிழ்,தீண்டாமை எதிர்ப்பு,பொதுச் சிவில் சட்டம்,வாக்களிப்பதின் அவசியம் என இந்த நந்தவனத்தில் பூத்துள்ள கட்டுரைகள்.பல வண்ணம் கொண்டவை.ஆனால் எல்லா கட்டுரைகளுக்கும் வேருக்கு நீராக இருப்பது மார்க்சியம்.” ரூ.90/-